சாப்பிடும் போது தண்ணீர் அருந்துவது நன்மையா?... ஆபத்தா? முழுதகவல் இதோ
மனிதன் அதிக அளவு தண்ணீர் குடிப்பது என்பது ஆரோக்கியமான ஒன்றுதான். தினசரி 4 லிட்டர் தண்ணீர் அருந்தினால் தான் நமது உடல் சீராக இருக்கும்.
ஆனால் பலருக்கும் இருக்கும் சந்தேகம், தண்ணீர் எப்போதெல்லாம் குடிக்க வேண்டும் என்பது தான். அதாவது சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது, சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது, சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது என்பதில் பலருக்கும் சந்தேகங்கள் உள்ளது.
சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் அப்படி தண்ணீர் எடுத்துக் கொள்ளும் போது நாம் சாப்பிடும் உணவின் அளவு குறைந்து, உடல் எடை கூடுவதற்கு தடையாக இருக்கும்.
இதனால் மருத்துவர்கள் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது உடலை பலவீனமாக்கும் என்கிறது ஆயுர்வேத மருத்துவம்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தாகம் எடுத்தால் அல்லது விக்கல் எடுத்தால் குறைந்த அளவிலான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதேசமயம் சாப்பிடும்போது குளிர்ந்த நீரை குடிப்பதை தவிர்க்கவேண்டும்.
குளிர்ந்த நீரை குடிக்கும் போது செரிமான மண்டலத்தில் என்சைம் செயல்திறன் குறைத்து, உடலில் வேண்டாத நச்சுக்கள் அதிகமாக உருவாகும் அபாயம் இருக்கிறது.
அதேசமயம் குறைந்த நீரை உறிஞ்சி குடித்தால் செரிமான மண்டலத்திற்கு நல்லது என்கிறது ஆயுர் வேத மருத்துவ முறை. உணவுகளை உடைப்பதற்கு தண்ணீர் உதவியாக இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சாப்பிட்டதற்கு பின்பு தண்ணீர் அருந்தும்போது சீரான செரிமானம் தடைப்படும் என்றும் இது உடல் பருமன் அதிகரிக்க உதவும் என்றும் ஆயுர்வேத மருத்துவ முறை தெரிவிக்கிறது.
உணவருந்திய 30 நிமிட இடைவெளிக்குப் பின்பு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் உணவு சாப்பிட்ட 1 முதல் 2 மணி நேரத்திற்குப் பிறகு தாகத்திற்கு ஏற்ப எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவருந்தும்போது சோடா, குளிர்பானம், காபி போன்றவற்றை பருகுவது உடலுக்கு நல்லதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.