பலமான நோயையும் முறியடிக்கும் வறுத்த சீரகம் எப்படி சாப்பிடுவது?
சீரகம் பொதுவாக வீட்டு சமையலைறைகளில் காணப்படும். இதை வைத்து உணவின் ருசியை அதினப்படுத்த பயன்படுத்துவார்கள். ஆனால் இதை வைத்து பல நோய்களை உடலில் இருந்து அகற்ற முடியும்.
பலரும் சீரகத்தை வெறுமையாக தண்ணீரில் என பல வகைகளில் சாப்பிடுவார்கள். வறுத்த சீரகத்தை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து சாப்பிடுவதால் பல அற்புத நன்மைகள் கிடைக்கும் என ஆயுர்வேத மருத்துவ முறைகளில் கூறப்பட்டுள்ளது.
இதை வயிறு பிரச்சனைகள் இருப்பவர்கள் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நன்மை தரும். வெதுவெதுப்பான நீரில் வறுத்த சீரகத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.
சீரக தண்ணீர்
உடல் எடையை குறைக்க: முயற்சிப்பவர்கள் வறுத்த சீரகத்தை உட்கொள்வது நனமையாகும். இது உடலின் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தி கொழுப்பை விரைவாக எரிப்பதால் உடல் எடை குறைகிறது.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த: நீரழிவு நோயாளிகளுக்கு இருக்கும் இன்சுலின் குறைபாட்டை தவிர்த்து இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி: வறுத்த சீரகத்தில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிப்பதன் காரணமாக பருவகால நோய்களான சளி, இருமல், வைரஸ் தொற்று மற்றும் பிற நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகிறது.
சருமத்தை அழகாக்க: சருமத்தில் பல நச்சுக்கள் சேர்வது வழக்கம். இதற்கு சிரகம் சிறந்த பலனை கொடுக்கும். இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது இதனால் இது சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்கும்.
வறுத்த சீரகத்தை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் போட்ட அதை அப்படியே உட்கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம், சில நாட்களில் சிறந்த பலனை பெறும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |