வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டால் நிகழ்வது என்ன? நீரிழிவு நோய்க்கு குட்பை சொல்லிடுங்க
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வெந்தயத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்னென்ன அதிசயம் நடக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்
வெந்தயம்
சமையலறையில் இருக்கும் பல வகையான மசாலாப் பொருட்களுடன் உணவிற்கு கூடுதல் சுவையை அளிப்பதுடன், ஆயுர்வேதத்திலும் பயன்படுத்தப்படும் பொருள் தான் வெந்தயம்.
பல பிரச்சினைகளை தீர்க்கும் மருத்துவ குணம் கொண்ட வெந்தயத்தில் எண்ணற்ற சத்துக்களும் அடங்கியுள்ளது.
வெந்தயத்தின் சத்துக்கள்.
வெந்தயத்தில் ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின், காப்பர், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து , மக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி6, சி மற்றும் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நன்மை என்ன?
வெந்தயத்தினை இரவில் ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் தண்ணீரை குடிக்கலாம். அவ்வாறு இல்லையெனில் வெந்தய பொடியை நீரில் கலந்து குடித்தால் பல பலன்களை பெறலாம்.
உடலில் வெப்பத்தினை தணிக்கும் முக்கிய பொருளாக இருக்கும் வெந்தயத்தினை காலை வெறும் வயிற்றில் வாயில் போட்டு தண்ணீர் குடித்தால், வெப்பத்தினை தணிக்கலாம்.
இதய நோய் பிரச்சினை வருவதை தடுக்கின்றது. ஏனெனில் வெந்தயத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதே இதற்கு காரணம் ஆகும்.
நீரிழிவு நோயாளிகள் காலை வெறும் வயிற்றில் வெந்தயத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும். ஏனெனில் வெந்தயத்தில் உள்ள அமினோ ஆசிட், இன்சுலின் உற்பத்தியினை தூண்டுவதால், சர்க்கரை அளவும் சரியாக இருக்கும்.
வெந்தயத்தில் இருக்கும் கரையும் நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சினையை நீக்குகின்றது. மேலும் உடல் எடையையும் குறைக்கின்றது.
சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்களை முற்றிலும் வெளியேற்ற பயன்படும் வெந்தயத்தினை சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும்.