ஆண்களே கட்டாயம் இத தெரிஞ்சிக்கோங்க.... தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை வாரி வழங்குவதில் பேரிச்சம்பழத்திற்கு இணை வேறு எதுவும் இருக்க முடியாது.
இந்த சிறிய பேரிச்சம் பழத்தில் அவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
முக்கியமாக பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் ஏராளமாக உள்ளது.
பேரிச்சம் பழத்தை அன்றாடம் உட்கொண்டு வந்தால், ஆண்களை அதிகம் தாக்கும் கொலஸ்ட்ரால் பிரச்சனை மற்றம். தினமும் ஒரு பேரிட்சை சாப்பிடுவதால் என்ன நன்மை கிடைக்கும் என்று பார்க்கலாம்.
ஆரோக்கியமான நரம்பு மண்டலம்
பேரிச்சம் பழத்தில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், இதனை உட்கொண்டால், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
பக்கவாதம் தடுக்கப்படும்
ஆராய்ச்சியாளர்கள், பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் உள்ளதால், அதனை அன்றாடம் ஆண்கள் உட்கொண்டு வந்தால், அவர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவதாக தெரிவித்துள்ளனர்.
எடையை அதிகரிக்கும்
ஒல்லியாக இருப்பவர்கள், குண்டாவதற்கு பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் போதும். நிச்சயம் குண்டாகலாம். அதுமட்டுமின்றி, ஆல்கஹால் குடித்து உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் பேரிச்சம் பழம் உதவும்.