அருகில் இருப்பவர்கள் மங்கலாக தெரிகிறார்களா? இந்த இலையை தினமும் வீசாமல் சாப்டுங்க
அன்றாட வாழ்க்கையில் நாம் சாப்பிடும் உணவுகளின் ஊட்டச்சத்து தேவைகள் மிகவும் முக்கியம். இது நமது சுவை மொட்டுகளுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் நல்லது.
எனவே தான் நாம் சாப்பிடும் சாப்பாட்டில் கறிவேப்பிவையை சேர்க்கிறார்கள். சிலர் இதை வீசிவிட்டு சாப்பிடுவார்கள், சிலர் இதை எப்போதாவது சாப்பிடுவார்கள்.
இலைகளால் கண்களின் ஆரோக்கியம் நிறைய மேம்படும். அந்த வகையில் கறிவேப்பிலை சாப்பிடுவது கண்பார்வையை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்த பதிவில் அதை விரிவாக பார்க்கலாம்.
கறிவேப்பிலை
மன ஆரோக்கியம், செரிமானம் மற்றும் கூந்தலுக்கு கறிவேப்பிலையின் நன்மைகள் பெரிதும் உதவும். கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது.
அந்த வகையில் நம் பார்வை மற்றும் ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் ஏ அவசியம். இது கண்களை வேறு பல பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாக்கிறது.
வைட்டமின் பி12 முழு உடலுக்கும் ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. கறிவேப்பிலையை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் பார்வையை சரியாக பராமரிக்க முடியும்.
இது நிச்சயமாக பார்வையைக் கூர்மையாக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு கண்புரை ஏற்படும் அபாயத்திலிருந்தும் கறிவேப்பிலை பாதுகாக்கும்.
இவை கண் திசுக்களைப் பாதிக்கும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கின்றன.
எனவே கறிவேப்பிலையை நீங்கள் தினமும் சாப்பிட்டால் பெரும் நன்மை பெறலாம். இதை பொடியாகவோ, ஊறவைத்த நீராகவோ அல்லது எவ்வழியிலோ நீங்கள் உணவாக எடுத்தால் மிகவும் நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |