காலை எழுந்தவுடன் சோர்வுடனேயே எழுந்திருக்கிறீர்களா? சோர்வை விரட்டி சுறுசுறுப்பாக இருக்க சில ஈஸியான டிப்ஸ்
பொதுவாகவே காலையில் எழும்பவே சோம்பலாக இருக்கும். படுக்கையை விட்டு எழவும் மனமே இருக்காது தலையில் இருந்து கால் வரைக்கும் ஒரே வழியாக இருக்கும்.
இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும் போல இருக்கும் அனைத்தையும் தவிர்த்து எழும்பியவுடன் அந்த நாளே மந்தமான நிலையில் தான் இருக்கும். இது எதனால் ஏற்படுகின்றது ஒரு வேளை ஏதேனும் வியாதியாக இருக்குமோ என பலர் சிந்திப்பத்துண்டு.
ஆம், நம் உடலில் ஊட்டச்சத்து குறைப்பாடு அதாவது விட்டமின் பி12, டி குறைப்பாடு காரணமாகத்தான் அப்படி ஒரு நிலையிருக்கும். மேலும், உடலில் ஒக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இருப்பதாலும் இந்த மந்த நிலை காணப்படும்.
இதனைத் தவிர்த்துக்கொள்வதற்கு சில டிப்ஸ் பின்பற்றினாலே போதும் இந்த சோம்பலை விரட்டி சுறுசுறுப்பாக இருக்கலாம்.
காலை சோர்வை போக்க
- காலையில் எழுந்த உடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் அந்த நாள் சுறுசுறுப்பான நாளாக மாறும்.
- 25 நிமிடம் யோகாப்பயிற்சி.
- தூங்குவதற்கு 2மணி நேரத்துக்கு முன்பே இரவு உணவை எடுத்துக்கொள்ளல்.
- வாரத்திற்கு ஒரு முறை விளக்கெண்ணெய் பாலிலோ அல்லது சுடுநீரிலோ கலந்து குடிக்க வேண்டும்.
- முளைக்கட்டிய பயறு மற்றும் நீர் காய் வகைகள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- காலை உணவை கஞ்சி வகை உணவுகளாக எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது எளிய உணவாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- வாரத்தில் இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களை முறையாக தொடர்த்து வந்தால் காலை நேர சோர்வை விரட்டி சுறுசுறுப்பான நாளாக மாற்றி வெற்றிப் பெற ஏதுவாக இருக்கும்.