உங்கள் வறுமைக்கு நீங்கள் தான் காரணம்! பணக்காரராக என்ன செய்யலாம்?
பொதுவாக எல்லோரும் வசதி படைத்தவராக இருக்க வேண்டும் என்பது மிகப் பெரிய ஒரு ஆசை தான்.
ஆனால் அது ஒரு சிலருக்கு நடந்தாலும் எம்மில் பலருக்கு சிம்ம சொப்பனமாகத்தான் இருக்கிறது. ஆனால் உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா? உங்கள் ஏழ்மைக்கும் வறுமைக்கும் நீங்கள் மாத்திரம் தான் காரணம். ஏன் தெரியுமா?
பணத்தை சேமிக்காததால் தான் வறுமைப்பிடியில் சிக்கிக்கொள்கிறோம். ஆனால் உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஈஸியான 9 டிப்ஸ் இதோ.
வறுமையில் இருந்து விடுபட
* முதலில் தேவையில்லாத செலவுகளை விடுத்து தேவையான செலவுகளுக்கு மாத்திரம் பணத்தை ஒதுக்குங்கள், வருமானத்திற்கு ஏற்றால் போல செலவு செய்யுங்கள், மாதந்தோறும் முதலீடுக்கு என்று ஒரு தொகையை ஒதுக்கிக் கொள்ளுங்கள்.
* நீங்கள் அதிக கடன் வாங்கியிருந்தால் உங்கள் வாழ்க்கையில் முன்னேற விடாமல் தடுக்கும். ஆகவே கடன் வாங்குவதை தவிர்த்திடுங்கள்.
* உங்கள் எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை சேமித்துக்கு கொள்ளுங்கள். ஏனெனில் விலைவாசிகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் எதிர்கால தேவைகளும் அதிகமாகும்.
* பிடித்தமான வேலை, போதுமான சம்பளம் மிகவும் முக்கியம், நீங்கள் செய்யும் வேலைக்கு ஏற்ற சம்பளம் உங்களிடம் இருக்கிறதா என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
* எதிர்பாராத அவசர செலவுகளுக்காக சேமித்து வைத்தல் முடியாது என்ற எண்ணத்தை தவிர்த்து நேர்மறையான எண்ணங்களை மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.
* ஒரு விடயத்தில் அதிக கவனம் செலுத்துவதால் அதீத மன அழுத்தம் ஏற்படும், இதுவும் உங்கள் சேமிப்பை தடுக்கிறது.
* அடுத்தவர்களை பற்றி யோசிக்காமல் உங்கள் வேலைகளில் அதிக கவனம் செலுத்தினால் உங்கள் சேமிப்பை உயர்த்தலாம்.