கண்ணாடியை திறந்ததும் அசுர வேகத்தில் தாக்கிய Eastern Indigo Snake... பதறவைக்கும் வைரல் காணொளி!
நபரொருவர் உச்ச வேட்டைத்திறன் கொண்ட Eastern Indigo Snake கண்ணாடியின் உள்ளே தானே இருக்கின்றது என நினைத்து அசால்ட்டாக கண்ணாயை திறந்ததும் நடந்த எதிர்பாராத பதறவைக்கும் சம்பத்தின் காட்சியடங்கிய காடிணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
கிழக்கு இண்டிகோ பாம்பு
கிழக்கு இண்டிகோ பாம்புகள் தென்கிழக்கு அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை. முதன்மையாக புளோரிடா தீபகற்பம் முழுவதும், தெற்கு ஜார்ஜியா, அலபாமா மற்றும் தென்கிழக்கு மிசிசிப்பியின் ஒரு சிறிய பகுதி வரை காணப்படுகின்றன.
விஷம் இல்லாத உச்ச வேட்டையாடும் இது, சில விஷ பாம்புகள் உட்பட பல வகையான விலங்குகளை வேட்டையாடுகிறது, மேலும் இது சுற்றுச்சூழல் அமைப்பை ஆரோக்கியமாகவும் சமநிலையுடனும் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த பாம்புகள் நீல கருப்பு நிறத்தில் இருக்கும் ஆனால் வெளிச்சத்தில் பளபளக்கும் ஊதா நிறத்தில் தோன்றமிளக்கும். அதன் தாடை, தலை மற்றும் தொண்டையின் பக்கங்கள் ஆரஞ்சு-சிவப்பு நிறத்தில் இருக்கும்.
இந்த பாம்பு இனத்தின் ஆண்கள் பொதுவாக 7–9 அடி நீளத்தை எட்டும், பெண்கள் சற்று சிறியதாக இருக்கும். புதிதாக பிறந்த குட்டிகள் 16-24 அங்குல நீளம் கொண்டவையாக இருக்கும்.
இந்த பாம்புகள் ஆண்டுக்கு 6–12 முட்டைகளை உற்பத்தி செய்கின்றன, இண்டிகோ பாம்புகள் புதிய வாழ்விடத்தையும் இரையையும் தேடி வெப்பமான காலங்களில் மூன்று மைல்கள் வரை பயணிக்கும் ஆற்றல் கொண்டவை.
இந்நிலையில் இந்த பாம்பின் வேட்டை திறனை பறைசாற்றும் காணொளியொன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |