உலகையே கலக்கத்தில் ஆழ்த்திய புகைப்படம்! துருக்கி நிலநடுக்கத்தில் சிறுமி செய்த காரியம்
துருக்கி சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இடிபாடுகளில் இருந்த சிறுமி ஒருவர் தனது தம்பியை பாதுகாத்த காணொளி நெகிழ வைத்துள்ளது
துருக்கி நிலநடுக்கம்
மத்திய கிழக்கு நாடான துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. 7.8 ரிக்டர் அளவிற்கு பதிவான இதனால் துருக்கி நாடே நிலைகுலைந்து போயுள்ளது.
அடுத்தடுத்த அதிர்வுகள் அண்டை நாடுகளான சிரியா, லெபனான், சைப்ரஸ், கிரீஸ், ஜோர்டான், இராக், ரொமானியா, ஜார்ஜியா, எகிப்து நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆங்காங்கே தோண்ட தோண்ட பிணங்களாக கிடைக்கும் நிலையில் அப்பகுதி முழுவதுமே அழுகை குரல்கள் நிறைந்துள்ளது.
இந்நிலையில் சிரியாவின் எல்லை பகுதியில் கட்டி இடிபாடுகளில் சிக்கிய சிறுமி ஒருவர் தனது தம்பியை கைகளால் வைத்து 24 மணிநேரம் காப்பாற்றி வைத்துள்ளார்.
குறித்த குழந்தைகள் இருவரும் மீட்கப்பட்ட நிலையில், இவர்களின் பெற்றோர் உறவினர்களின் தகவல் எதுவும் தெரியவில்லை. தற்போது குறித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அனைத்தையும் இழந்து உயிரை மட்டும் வைத்துக் கொண்டு அந்த சிறுமி பேசியது பலரையும் கண் கலங்க செய்துள்ளது.