அதிகாலையில் பெண்ணிடமிருந்து வந்த போன்கால்... நேரில் சென்ற பொலிசார் பாத்ரூமில் கண்ட அதிர்ச்சி
இளம் தாய் ஒருவர் தனது 6 வயது மகனை கழிவறையில் வைத்து கழுத்து அறுத்து கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் பூலக்காட்டு என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுலைமான். இவரது மனைவி ஷாஹிதா(30). கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 4 மணியளவில் பாலக்காடு கன்ட்ரோல் அறைக்கு திடீரென போன் வந்துள்ளது.
அப்போது "ஹலோ என்று கூறிய குரல் நான் ஷாஹிதா பேசுவதாகவும், தனது 6 வயதான அமீல் மகனை கொலை செய்துவிட்டேன் என்று கூறியதோடு, தனது வீட்டு முகவரியையும் கூறியுள்ளார். இதை கேட்டதும் அதிர்ந்து நின்ற பொலிசார், சிறிது நேரத்தில் ஷாஹிதா வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது பொலிசாருக்காக அப்பெண் காத்துக்கொண்டிருந்ததோடு, ஷாஹிதாவின் மீது ரத்தம் வழிந்த வண்ணம் காணப்பட்டுள்ளார்.
அப்பொழுது வீட்டிற்குள் சென்ற பொலிசார் கழிப்பறையில் சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு, கால்கள் இறுக்கமாக கட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் காணப்படுகின்றார். அதே வீட்டில் ஒரு அறையில் ஷாஹிதாவின் கணவரும், குழந்தைகளும் தூங்கி கொண்டிருந்த நிலையில் அவர்களுக்கும் அதுகுறித்து எதுவும் தெரியாமல் இருந்துள்ளனர். இப்பெண்ணின் கணவர் பெயர் சுலைமான்.
இவர்களுக்கு ஏற்கெனவே 3 மகன்கள் இருக்கிறார்கள். இப்போது மனைவி கொலை செய்தது 4வது மகன். இதைதவிர, இப்போது ஷாஹிதா 3 மாத கர்ப்பமாக இருக்கிறாராம்.
ஆரம்ப காலத்தில் சுலைமான் அரபு நாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது சொந்த ஊரில் ஆட்டோ ஒட்டி வருகின்றார். பிள்ளையை ஏன் கழுத்து அறுத்து கொன்றீர்கள் என்று பொலிசார் கேட்டதற்கு, அல்லாவுக்கு நரபலி கொடுக்க முடிவு செய்ததாகவும், அதனாலேயே தூங்கி கொண்டிருந்த மகனை பாத்ரூமுக்கு அழைத்து சென்று கத்தியால் கழுத்தை அறுத்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ஏற்கெனவே காவல்நிலையத்தில் போன் நம்பரை வாங்கியுள்ள நிலையில், இவர் மதராசா பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.