மார்கழி மாதத்தில் அதிகாலையில் கோலமிடுவதற்காக காரணம் என்ன?
பொதுவாக மார்கழி மாதம் என்றாலே கோலமிடுவது என்பது வழக்கமான ஒன்றாக இருக்கின்றது. இவ்வாறு அதிகாலையில் கோலம் போடுவதற்கு என்ன காரணம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மார்கழி மாதத்தில் அதிகாலையில் கோலமிடுவதற்காக காரணம் என்ன?
ஆடியில் அம்மனும், புரட்டாசியில் பெருமாளும், மார்கழியில் அனைத்து தெய்வங்களும் என, மாதத்துக்கு ஒரு தெய்வம் என வழிபட வகுத்துள்ளார்கள் நம் முன்னோர்.
ஏனெனில், ஆடியில் பலமுள்ள காற்று வீசும். அப்படி வீசும் காற்று விஷக்காற்று என்பதால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து அம்மன் கோவில்களில் உள்ள கிருமிநாசினியான வேப்பிலையின் மணத்தை சுவாசிக்கும் போது, விஷக்காற்று முறியடிக்கப்படுவதுடன், இயற்கையான ஆக்சிஜனும் கிடைக்கிறது.
இதே புரட்டாசி மழைக்காலம் என்பதால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே அப்போது கிடைக்கும் சத்து மிகுந்த காய்கறிகளைப் படைத்து பெருமாளை வழிபடுகிறார்கள்.
இம்மாதத்தில் காய்கறிகளின் சத்தும், துளசி தீர்த்தமும் நம் உடலுக்குத் தேவையான ஆரோக்கியத்தைத் தருகிறது.
இதே போல் மார்கழி மாதத்தின் அதிகாலையில், ஓசோன் படலம் வழி, ஆரோக்கியமான, உடல் நலனைத் தரும் காற்று அதிகம் பூமியில் இறங்கும்.
இது நம் வியாதிகளைக் கட்டுப்படுத்தும் என்பதால் தான் மார்கழி அதிகாலையில் பெண்கள் எழுந்து சாணம் தெளித்து கோலமிட வேண்டும் என முன்னோர்கள் கூறினர். நம் உடலில் 80 சதவீதம் ஆக்ஸிஜனும் 20 சதவீதம் கரியமில வாயுவும் இருக்க வேண்டும்.
தவறான பழக்க வழக்கங்களால் கூடுதலாகிவிட்ட விஷவாயுவான கார்பன் - டை - ஆக்ஸைடை விரட்டி ஆக்சிஜனை நம் உடல் பெறுவதால் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் பெருகி நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது.
இந்த நல்ல வாயுவை சுவாசிக்கும் பொருட்டே அதிகாலை மார்கழியில் எழுவது என்பதை தெய்வத்தின் பெயரால் கட்டாயப்படுத்தி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |