Viral Video: தண்ணீருக்குள் காத்திருந்த கழுகுக்கு கிடைத்த மீன் வேட்டை... வைரலாகும் காட்சி
கழுகு ஒன்று தண்ணீருக்குள் வெகுநேரம் காத்திருந்து மிகப்பெரிய மீனுடன் வெளியே வந்து பறந்த காட்சி வைரலாகி வருகின்றது.
கழுகின் மீன் வேட்டை
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகு, நாரை இவைகள் மீனை வேட்டையாடும் காட்சியினை பல அவதானித்து வரும் நிலையில், தற்போதும் கழுகின் மீன் வேட்டை காட்சியே இதுவாகும்.

கழுகுபார்வை என்பதற்கான அர்த்தத்தினை தனது செயலினால் வெளிக்காட்டியுள்ள கழுகின் செயலை தான் பார்க்கப் போகின்றோம்.
இங்கு கழுகு ஒன்று தண்ணீரில் வெகுநேரம் அமர்ந்து பொறுமையாக காத்திருக்கின்றது. கடைசியில் எழும்பும்போது மிகப்பெரிய மீனை வேட்டையாடி பறக்க ஆரம்பித்துள்ளது.
கடைசிவரை மீனை விடாமுயற்சியினால் தனது கால்களை வைத்து பற்றிக்கொண்டு செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |