Viral Video: ஒரு மீனுக்கு சண்டையிட்ட இரண்டு கழுகுகள்! மாஸான கடைசி தருணம்
கழுகு ஒன்று மிகப்பெரிய மீனை வேட்டையாடி சாப்பிட நினைத்த போது அதனை தட்டிப்பறிக்க மற்றொரு கழுகு வந்து சண்டையிடும் காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.
மீனுக்கு சண்டையிட்ட இரண்டு கழுகுகள்
பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலத்தில் அதிகமாக கழுகு வேட்டை காட்சிகள் வெளியாகி வருகின்றது.
கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்று கூறுவது 100 சதவீதம் உண்மையே. இதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் கழுகின் வேட்டையும் இருக்கின்றது.
அதிகமான மீன் வேட்டையை அவதானித்தாலும், புதிய புதிய காட்சியை மறுபடியும் பார்க்கும் போது சலிக்காமல் சுவாரசியமாகவே இருந்து வருகின்றது.
இங்கு குறித்த காட்சியில், கழுகு ஒன்று மீனை வேட்டையாடி அதனை சாப்பிட செல்கின்றது. இத்தருணத்தில் மற்றொரு கழுகு வந்து குறித்த மீனுக்காக சண்டையிட்டுள்ளது.
மீனைக் கைப்பற்ற பயங்கரமாக சண்டையிட்ட கழுகு வேட்டையாடிய கழுகின் காலினை பிடித்துக் கொண்டு விடாமல் தாக்கியுள்ளது.
ஆனால் ஒன்றுக்கு ஒன்று சலைத்தது இல்லை என்பதற்கு ஏற்ப வேட்டையாடிய கழுகு ஒருவழியாக தனது மீனை தக்கவைத்துக் கொண்டு எஸ்கேப் ஆகியுள்ளது..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |