Viral Video: கழுகிடம் சிக்கிய ராட்சத மீன்... நொடிப்பொழுதில் எஸ்கேப் ஆகியது எப்படி?
கழுகு ஒன்று மிகப்பெரிய மீனை வேட்டையாடிவிட்டு செல்லும் அட்டகாசமான காட்சி ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கின்றது.
கழுகின் மீன் வேட்டை
இன்று கழுகுகளில் மீன் வேட்டைகள் அதிகமாக காணொளியாக வெளியாகியுள்ளது. அதிலும் கூர்மையான பார்வையைக் கொண்ட கழுகு வேட்டையாடுவதை பார்ப்பதே தனி அழகு தான்.
எவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டிருந்தாலும், தண்ணீருக்குள் நீந்தும் தனக்கான இரையை அவதானித்துவிடுகின்றது. கழுகு பார்வை என்பதை நிரூபிக்கும் வகையில் பல ஆச்சரியமான காட்சிகள் வெளிவருகின்றது.

அதிகமான மீன் வேட்டையை அவதானித்தாலும், புதிய புதிய காட்சியை மறுபடியும் பார்க்கும் போது சலிக்காமல் சுவாரசியமாகவே இருந்து வருகின்றது.
இங்கு கழுகு ஒன்று நீண்ட நேரம் தண்ணீருக்குள் அமர்ந்து மிகப்பெரிய மீனை வேட்டையாடி எழும்பியுள்ளது. எழும்பிய பின்பு தான் பார்வையாளர்கயே வாயடைத்துபோயுள்ளனர்.
மிகப்பெரிய மீனை வேட்டையாடிய சில நொடிகளில் மீன் எஸ்கேப் ஆகிய தண்ணீருக்குள் விழுந்து தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டுள்ளது. ஆனால் கழுகு இதனை சற்றும் அறியாமல் பறந்துள்ளது.