ஏப்ரலில் 5 முறை உருவாகும் ஒரே யோகம் : இந்த ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி
ஜோதிட கணிப்புகளில் கிரக பெயர்ச்சிகளுக்கு எந்தளவுகு்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றதோ, அதே அளவுக்கு கிரக சேர்க்கயையால் உருவாகும் அரிய யோகங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
அந்தவகையில், ஏப்பல் மாதத்தில் இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 2 மற்றும் 12 ஆவது வீட்டில் சந்திக்கும் போது உருவாகும் அரிய துவித்வாதச யோகமானது மிகவும் அரிதாக 5 முறை உருவாகின்றது.

குறித்த யோகமானது ஏப்ரல் 1, 4, 19, 23, 29 ஆகிய திகதிகளில் உருவாகவுள்ளது. சுக்கிரன், நெப்டியூன், சனி, சூரியன், யுரேனஸ் ஆகிய கிரகங்களால் உருவாகவும் இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் பிரதிாலித்தாலும், உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

- துவித்வாதச யோகத்தால் ரிஷப ராசியில் பிறந்தவர்கள் பொருளாதார ரீதியில் உச்சகட்ட சாதக பலன்களை பெறப்போகின்றார்கள்.
- இவர்களின் வங்கிக்கணக்கில் பணம் குவிவதற்கான வாய்ப்புகள் தானாகவே உருவாகும்.
- வெளிநாட்டு உறவினர்கள் அல்லது நண்பர்களிடமிருந்து பெரும் தொகை பணம் பரிசாக கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
சிம்மம்

- துவித்வாதச யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கையில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படப்போகின்றது.
- பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.
- இவர்கள் நினைத்த காரியத்தை நடத்தி முடிப்பதற்கு குடும்பத்தின் ஒத்துழைப்பு பலமான இருக்கும்.
துலாம்

- துவித்வாதச யோகம் துலாம் ராசிக்கார்களின் நிதி நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றம் உண்டாகும்.
- பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் மற்றும் உயர் பதவிகள் வழங்கப்பட அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
- நீண்டகால கடன் தொல்லைகளுக்கு வெற்றிகரமாக முடிவு கட்டுவீர்கள். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி உருவாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |