மலச்சிக்கலை போக்கும் Dulcoflex மாத்திரைகள்
மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்களுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்து Dulcoflex.
இறுகிப்போன மலத்தை மிக எளிதாக வெளியேற்றவும், குடலின் செயல்பாடுகளையும் மேம்படுத்தவும் Dulcoflex பயன்படுத்தப்படுகிறது.
இதுதவிர அறுவைசிகிச்சைகளுக்கு முன்னர் குடலை சுத்தப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பல காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படலாம். இதனால் மலத்தை வெளியேற்ற முடியாமல் பலரும் அவஸ்தைப்படுவார்கள்.
இதற்கு தீர்வாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளில் மிக முக்கியமானது Dulcoflex.
ஒரே இரவில் தீர்வை கொடுக்கும் மாத்திரைகள் குடலின் செயல்பாடுகளையும் மேம்படுத்துகிறது.
இரவு படுக்கைக்கு முன்னர் 1 அல்லது 2 மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்.
6 முதல் 8 மணிநேரத்துக்குள் மலச்சிக்கலுக்கான தீர்வை தருகிறது, மருத்துவர்களின் பரிந்துரைப்படியே மருந்துகளை எடுத்துக்கொள்ளவும், சுயமாக நீங்களாகவே எடுத்துக் கொள்வது ஆபத்தை விளைவிக்கும்.
தேவையான அளவு தண்ணீருடன் மாத்திரையை அப்படியே விழுங்கிவிடவும், கடித்தோ, மென்றோ சாப்பிட வேண்டாம்.
மலச்சிக்கலுடன் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவையும் குறைக்கிறது, பால் அல்லது பழச்சாறுடன் இணைந்து Dulcoflex மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம்.
மருந்துகளையும் தாண்டி அதிகளவு தண்ணீர் அருந்துவது மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வை தரும்.
குடல் அழற்சி, அதீத நீரிழப்பு மற்றும் குடல் அடைப்பு போன்ற பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கவும்.
மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுகளில் மட்டுமே எடுக்கவும், இதில் உள்ள மூலக்கூறுகளில் ஏதேனும் அலர்ஜி உங்களுக்கு இருந்தால் முன்கூட்டியே தெரிவிக்கவும்.
கர்ப்பமாக இருந்தாலோ, கர்ப்பம் தரிக்க திட்டமிட்டாலோ, தாய்ப்பாலூட்டினாலோ மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
பக்கவிளைவுகள்
அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது,
குமட்டல்
அடிவயிற்றில் வலி
வயிற்றுப்போக்கு
வாந்தி
பொட்டாசியத்தின் அளவு குறைதல்
போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது, மூல நோய்க்கு மருந்தாகாது.