வாத்து முட்டை ஐஸ்கிரீம்: இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி
சிங்கப்பூரை சேர்ந்த பிரபல உணவுப்பதிவாளர் கால்வின் லீ என்பவரால் வாத்து முட்டை ஐஸ் கிரீம் வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
வைரல் வீடியோ
தற்போது சோசியல் மீடியாக்களில் புதுவிதமான உணவுகளை உருவாக்கி அதன் சுவையை பரிசோதித்து பார்க்கும் வீடியோ பரவலாக காணப்படுகின்றது.
அந்த வகையில் தான் சமீபத்தில் ஒரு வீடியோ இணையத்தில் வரைலாகி வருகின்றது. இந்த வீடியோ சிங்கப்பூரைச் சேர்ந்த பிரபல உணவுப் பதிவாளர் கால்வின் லீ என்பவரால் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது.
இவர் சோசியல் மீடியாவில் புதுவிதமான உணவுகளை சோதித்துப் பார்ப்பதில் பெயர் பெற்றவர். உப்பு சேர்த்து முட்டை ஐஸ்கிரீமை எப்படி செய்வது என்ற வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இதன்போது அவர் இந்த வாத்து முட்டை ஐஸ்கிரீம் சுவையாக இருப்பதாகவும் இதை அனைவரும் ருசித்து பார்க்குமாறும் தெரிவித்துள்ளார்.
இதை பார்த்த இணையவாசிகள் மகிழ்ச்சியுடனும் ஆவலுடனும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.