தனித்தீவு வாங்கி கொடுத்த கணவர் மனைவிக்கு போட்ட கண்டிஷன்- இவ்வளவு இருக்கா?
சமீபத்தில் மனைவியின் ஆசைக்காக தனித்தீவு வாங்கி கொடுத்த கணவர்- மனைவிக்கு போட்ட கண்டிஷன்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
துபாயில் சவுதி அல் நடக் என்ற பெண் என்ற பெண்ணிற்கு பிகினி ஆடை அணிய ஆசை வந்ததால் அவருடைய கணவர் அதற்காக தனித்தீவு வாங்கி கொடுத்துள்ளார்.
தற்போது 26 வயதாகும் சவுதி அல் நடக்கிறது திருமணமாகி 3 ஆண்டுகள் கடந்துள்ளது. துபாயில் பெரும் பணக்காரரான ஜமால் அல் நடக் என்பவரை தான் திருமணம் செய்துள்ளார்.
சவுதி அல் நடக் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வாழ்க்கையில் நடக்கும் சுவார்ஸ்யமான விடயங்களை அடிக்கடி பகிர்வார்.
கணவர் போட்ட கண்டிஷன்கள்
அந்த வகையில் தனது கோடீஸ்வர கணவர், தனக்கு கொடுத்திருக்கும் விதிகள் குறித்து காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “சவுதி அல் நடக்கின் காலணிக்கு பொருத்தம் இல்லாத கைப்பைகளை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். வேலை செய்யத்தேவையில்லை, என் கணவர் தான் அனைத்து செலவுகளையும் பார்த்து கொள்வார், நான் சமைக்க மாட்டேன், எங்களுக்கு தேவையான உணவுகளை வெளியில் வாங்கி சாப்பிடுவோம்.
மேலும், எனக்கு தினசரி மேக்கப் போடுவதற்காக தொழில் வல்லுநர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், எனக்கு ஆண் நண்பர்கள் இருக்கக்கூடாது..” ஆகிய விதிகளை கூறியுள்ளார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகவுள்ள நிலையில், இதனை பார்த்த நெட்டிசன்கள், “நீங்கள் தங்கக் கூட்டில் சிறைப்பட்டுள்ளீர்கள்...” என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |