பணி ஓய்வு பெற்ற நாளில் பேருந்தை கட்டியணைத்து கதறி கதறி அழுத ஓட்டுனர் - வைரலாகும் வீடியோ!
பணி ஓய்வு பெற்ற நாளில் பேருந்தை கட்டியணைத்து கதறி கதறி அழுத ஓட்டுனரின் வீடியோ வைரலாகி வருகிறது.
பேருந்தை கட்டியணைத்து கதறி அழுத ஓட்டுனர்
அந்த வீடியோவில், 30 ஆண்டுகளாக சிறப்பாக அரசு பேருந்து ஓட்டிய ஊழியர்களுக்கு 60 வயது எட்டியதால் நேற்று ஓய்வு பெற்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் அரசு போக்குவரத்து பணிமனையில் 30 ஆண்டுகளாக முத்துப்பாண் என்பவர் பேருந்தை இயக்கியுள்ளார். நேற்று அவருக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஓய்வு பெறும் நாளில் கடைசியாக பேருந்தை இயக்கி பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து வணங்கினார்.
இதனையடுத்து, தான் இயக்கிய அரசு பேருந்தை முத்தமிட்டு கட்டித் தழுவி கண்ணீர் விட்டு கதறி அழுதார். எனக்கு இந்த அரசு பேருந்ததால் தான் என் வாழ்வில், திருமணம், மதிப்பு கிடைத்தது. என் பணிகளை சிறப்பாக செய்து முடித்துள்ளேன். இன்று நான் ஓய்வு பெறுகிறேன். சக ஊழியர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஓய்வுபெறும் கடைசி நாளில் அரசு பேருந்தை கட்டிபிடித்து முத்தமிட்டு நெகிழ்ந்த ஓட்டுநர் முத்துபாண்டி!#Minnambalam #GovtBusDriver #Tamilnadu #ViralVideo #TrendingVideo pic.twitter.com/6DD6v5TjFc
— Minnambalam (@minnambalamnews) June 1, 2023