பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிக்கிறீங்களா? ஆபத்தை அறிந்து கொள்ளுங்கள்
பிளாஸட்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்தை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இன்று பலரும் பிளாஸ்டிக் பொருட்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் தண்ணீர் குடிப்பதற்கு கூட பிளாஸ்டிக் போத்தல்களை பயன்படுத்தி வருகின்றனர்.
வெளியே சென்றால் கையில் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லாமல், கடைகளில் பிளாஸ்டிக் பாட்டிலில் விற்கப்படும் தண்ணீரை வாங்கி குடித்து விடுகின்றோம்.
பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் உடம்பிற்கு பல கேடுகள் ஏற்படுவதுடன், நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றது.
பிளாஸ்டிக் பாட்டிலில் குடிப்பதால் என்ன தீமை?
சமீபத்தில் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது நீரிழிவு மற்றும் ஹார்மோன் செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கின்றதாம்.
இதில் பயன்படுத்தப்படும் பிபிஏ இன்சுலின் டைப் 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிப்பதுடன், உயர் ரத்த சர்க்கரையை ஏற்படுத்தும் ஆபத்தும் அதிகமாகவே இருக்கின்றது.
ஆகவே தயவு செய்து மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |