டீ குடிச்சுட்டு உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கா? உடம்பில் பல சிக்கல் ஏற்படுமாம்
டீ குடித்த உடனே தண்ணீர் குடிப்பது உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளது அதிர்ச்சியளிக்கின்றது.
இந்தியாவில் மக்கள் அதிகமாக விரும்பி குடிக்கும் பானம் தேநீர் தான். காலை மாலை இரவு என நேரம் பார்க்காமல் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
சில தருணங்களில் தேநீர் அருந்தாமல் எந்தவொரு வேலையையும் செய்யாத நிலையில் கூட இருப்பார்கள். ஆனால் சிலர் டீ குடித்த உடனேயே தண்ணீர் குடிப்பதையும் வழக்கமாக வைத்திருப்பார்கள்.
இந்த பழக்கம் மிகவும் தீங்கு ஏற்படுத்தும் என்பது தெரியவந்துள்ளது. அவை என்னென்ன பாதிப்பு என்பதை தெரிந்து கொள்வோம்.
டீ குடித்த உடனே தண்ணீர் குடிப்பது ஆபத்தா?
டீ குடித்த உடன் தண்ணீர் குடிப்பது நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துமாம். டீ குடித்தஉடன் தண்ணீர் குடிப்பது பற்களில் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றது.
இந்த தவறை நீங்கள் செய்தால் அல்சர் பிரச்சனை ஏற்படுமாம். வயிற்றுப் புண்கள் ஏற்பட்டு இறுதியில் அல்சர் குணப்படுத்த முடியாத அளவிற்கு சென்றுவிடுமாம்.
சிலருக்கு குளிர்ச்சி மறறும் வெப்பம் சேர்ந்து ஒரே நேரத்தில் செல்லும் போது மூக்கில் ரத்தம் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.
மேலும் தொண்டை வலி மற்றும் இருமல் சளி போன்ற தொந்தரவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. டீ-யை குடித்த பின்பு ஒரு 30 நிமிடம் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |