பழங்களை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பவரா நீங்க? ஆபத்து குறித்து எச்சரிக்கும் மருத்துவர்கள்!
பொதுவாகவே போதுமாக அளவு தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது. அதுபோல் பழங்கள் சாப்பிடுவதும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான விஷயம்.
பொதுவாக பழங்கள் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்க மாட்டோம். அதிலும் இந்த சில பழங்களைச் சாப்பிடும்போதும் பழங்கள் சாப்பிட்ட உடனேயும் தண்ணீர் குடிக்கவே கூடாது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பொதுவாக பழங்கள் சாப்பிட்ட உடன் ஏன் தண்ணீர் குடிக்க கூடாது என்பது குறித்து விளக்கமாக இங்கே தெரிந்து கொள்ளலாம்.
என்ன காரணம்?
பொதுவாக பழங்களில் இயற்கையாகவே சத்துக்களும், அதிக அளவிலான நீர்ச்சத்தும் செரிந்து காணப்படுகின்றது.

குறிப்பாக தர்பூசணி, வெள்ளரிக்காய், ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி மற்றும் பப்பாளி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதால் உடலில் சில ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பழங்களில் இயற்கையான சர்க்கரை மற்றும் ஈஸ்ட் பொருட்கள் உள்ளன. இவற்றை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கும் போது, அது நமது வயிற்றில் சுரக்கும் செரிமான அமிலங்களை நீர்த்துப்போக செய்வதால், செரிமான சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

அதாவது செரிமான நொதிகள் நீர்த்து போவதால், பழங்களில் உள்ள சத்துக்களை உடல் முழுமையாக உறிஞ்சுவதில் சிக்கல் ஏற்படுவதுடன் இது செரிமானத்திலும் பாதிப்பை ஏற்படும். செரிமான அமைப்பின் pH அளவை சீர்குலைத்து, செரிமான சிக்கல் மற்றும் வயிற்று உபாதைகளை ஏற்படுத்தக்கூடும்.
மேலும் வயிற்று பிடிப்பு மற்றும் வாயு தொல்லை போன்ற ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.பழங்கள் செரிமானம் ஆவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் தேவைப்படுகின்றது.
பழங்களை சாப்பிட்ட உடனே அதிகப்படியான தண்ணீரை குடிப்பதால், செரிமான செயல்முறை தாமதமாகின்றது.

செரிமானத்தில் ஏற்படும் சிக்கல் காரணமாக வயிற்றில் வாயு உற்பத்தி அதிகரித்து, வயிற்று பொருமல், வயிற்று பிடிப்பு மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
குறிப்பாக வாழைப்பழம் மற்றும் மாம்பழம் சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடிப்பதால், இந்த நிலை ஏற்பட வாய்ப்பு அதிகம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற தாதுக்கள், தண்ணீருடன் சேரும்போது செரிமானத்தை மேலும் தாமதப்படுத்தலாம். அதேபோல, மாம்பழத்தில் உள்ள சில பிரத்யேக என்சைம்கள் தண்ணீருடன் சேரும் போது செரிமான சிக்கல் உருவாகும்.

எனசே தான் பழங்களை சாப்பிடுவதற்கு முன்போ அல்லது சாப்பிட்ட உடனையோ தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது சிறப்பு என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
பழங்களை சாப்பிட்டு குறைந்தது ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பதே செரிமான அமைப்பின் ஆரோக்கியத்துக்கு நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |