தூக்கத்திற்கு முன் இதை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிங்க - முகம் கண்ணாடி போல மாறும்
இரவில் தூங்கும் போது நம் சருமம் பளபளக்க வெதுவெதுபான நீரில் 3 பொருட்களை கலந்து குடிப்பது அவசியமாக இருக்கிறது.
சருமம் பளபளக்க
காலையில் எழுந்தவுடன் நமது சருமம் புத்திதுணர்ச்சியுடனும் பளபளப்புடனும் இருக்க நாம் விலை உயர்ந்த பொருட்கள் பயன்படுத்த தேவை இல்லை. இதற்கு கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரில் 3 பொருட்கள் போதும்.
நாளொன்றிற்கு நமது சருமம் மிகவும் தூசு மாசு மற்றும் அழுக்கிற்கு உள்ளாக நேரிடும். இதற்கென பல இரசாயன பொருட்களை வாங்கி பயன்படுத்தினால் அது சரும தீங்கை ஏற்படுத்தும்.
வெதுவெதுப்பான நீரில் என்ன குடிக்க வேண்டும்?
வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் நெய்,
எலுமிச்சை சாறு அல்லது தேன் கலந்து குடிக்கலாம்.
இந்த மூன்று பொருட்களும் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.
எப்படி உட்கொள்ள வேண்டும்?
இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும். அந்த நீரில் நெய், எலுமிச்சை அல்லது தேன் போன்ற உங்களுக்குப் பிடித்த எதையும் அதில் சேர்க்கலாம்.
தேநீர் போல மெதுவாக இதை குடிக்கவும். இதற்குப் பிறகு எந்த கனமான உணவையும் சாப்பிட கூடாது. பளபளப்பான சருமத்தைப் பெற விலையுயர்ந்த பொருட்கள் தேவையில்லை.
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரும் அதனுடன் சேர்க்கப்படும் ஒரு இயற்கை மூலப்பொருளும் உங்கள் சருமத்தை உள்ளிருந்து பளபளப்பாக்க உதவும். இந்த முறை எளிதானது மட்டுமல்ல, பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |