உடல் எடை கடகடவென குறைய வேண்டுமா? இந்த பானத்தை கட்டாயம் குடிங்க
உடல் எடையை குறைக்க உதவும் ஆறு அற்புதமான பானங்கள் பற்றி இங்கே பார்க்கலாம். இவை உங்கள் டயட் பயணத்திற்கு பெரிதும் உதவும்..

கிரீன் டீ
கிரீன் டீயில் கேட்டசின்கள் மற்றும் காஃபின் நிறைந்துள்ளது. இது மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.
பிளாக் காபி
காஃபின், மெட்டபாலிசத்தின் வேகத்தை அதிகரிக்கிறது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்க முடியும்.

இஞ்சி எலுமிச்சை தண்ணீர்
இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர், வயிறு உப்புசமாக இருப்பதை குறைக்கும். இது நல்ல செரிமானத்திற்கு நல்லது.
ஆப்பிள் சைடர் வினிகர்
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஆப்பிள் சைடர் வினிகரைக் கலந்து குடித்தால், பசி உணர்வு குறையும், மேலும், இது ரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கும்.

இஞ்சி டீ
இஞ்சி டீ மெட்டபாலிசத்தை மேம்படுத்துகிறது. அதிக கலோரிகளை எரிக்க உதவுவதோடு, வயிறு நிரம்பிய உணர்வையும் கொடுக்கும்.
புதினா தண்ணீர்
புதினா தண்ணீரில் கலோரிகள் மிகவும் குறைவு. எனவே இது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. புத்துணர்ச்சிக்கும் இது சிறந்தது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |