நீங்க அதிகமாக டீ குடிக்கிறீங்களா? இந்த கொடிய உயிர்கொல்லி நோயை ஏற்படுத்தும் .... உஷாரா இருங்க!
இன்றைய காலகட்டத்தில் டீ குடிப்பது மக்கள் பலரின் அன்றாட பழக்கமாகவும், பொழுதுபோக்காகவும் உள்ளது. டீயில் உள்ள காபின் உடல் நலத்துக்கு நல்லதல்ல என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஒரு கோப்பை காபியில் இருக்கும் காபினைவிட மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே ஒரு கோப்பை டீயில் காபின் உள்ளது. சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. இல்லையென்றால் இது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.
பக்கவிளைவு தேநீரில் சேர்க்கப்படும் பொருள்களால் உங்கள் எடை அதிகமாகவும் கூடும். இதில் தேன், சர்க்கரை கலந்தால் உங்க கலோரிகளை அதிகப்படுத்தும். தேயிலைகளில் குரானா மற்றும் ஜின்ஸெங்கைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இது நியாசின், விட்டமின் பி போன்ற சத்துக்களை குறைத்து விடும்.
நீங்கள் நீண்ட நாளாக குடித்து வரும் போது அது உங்கள் தூக்கத்தை தொல்லை செய்யகூடும். தேயிலையில் உள்ள காஃபின் எதிர்மறையான விளைவுகளான தலைவலி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டிருக்க வாய்ப்புண்டு. காஃபின் இரத்த அழுத்தத்தை உயர்த்தக்கூடும் மேலும் இவை காதுகளில் எரிச்சலூட்டும் உணர்வை ஏற்படுத்தக் கூடும். தேநீரில் உள்ள அமிலம் மற்றும் டானின்களை நீங்கள் தினமும் குடித்தால் காலப்போக்கில் பற்களுக்கு மஞ்சள் நிறத்தை தரும்.
ஒவ்வொரு நாளும் தேநீர் குடிப்பது காலப்போக்கில் அதிக எண்ணிக்கையிலான கன உலோகங்களை உட்கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
தேநீரில் டையூரிடிக் காஃபின் காணப்படுகிறது. இது உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டும். இதனால் அடிக்கடி பாத்ரூமிற்கு செல்ல நேரிடும். இதனால் நீரிழப்பு உண்டாக வாய்ப்புள்ளது.