கோடைகாலத்திற்கு ஜில்லுனு தண்ணீர் குடிக்கிறீங்களா? எச்சரிக்கை இந்த பிரச்சனைகள் வரும்
கோடைகாலம் வந்துவிட்டால் நாம் எல்லோரும் தண்ணீரைத் தான் தேடிச் செல்கிறோம். இந்த கோடைகாலத்தில் நீர்ச்சத்து நிரம்பிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்துகொள்ள வேண்டும். உடல் வறட்சி அடையும்போது உடல் தண்ணீர் கேட்கும் அப்போது ஜில்லென்று தண்ணீர் குடித்தால் இதமாக இருக்கும் என்பதற்காக எல்லோரும் குளிர்ந்த தண்ணீர் குடிப்பது வழக்கம்.
ஆனால் இவ்வாறு கோடைகாலத்தில் ஜில் என்ற தண்ணீர் குடிக்கும் போது அது பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும். இந்த பக்க விளைவுகள் என்ன என்பதை தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜில் தண்ணீர்
அதிக வெயிலில் நாக்கிற்கு இதமாக குளிர்ந்த நீர் குடித்தால் இதமாக இருக்கும் என்பதற்காக நாம் நிறைய குளிர்ந்த தண்ணீர் குடிப்பதனால் உடலில் பல பிரச்சனைகள் உருவாகின்றது.
இந்த குளிர்ந்த நீர் வயிற்றின் உள்ளே செல்லும்போது குடல் அதை பழகிக் கொள்ளாததால் உடனே சுருங்க ஆரம்பிக்கும். இதனால் அசிடிட்டி பிரச்சனை உருவாகும்.
நமது குடலின் செரிமான அமைப்பை பாதிக்கச் செய்கிறது இந்த குளிர் நீர். மேலும் மலச்சிக்கல், வாயுப்பிரச்சனை, குமட்டல், வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் வரும்.
நாம் குளிர்ந்த நீரை அதிகமாக குடிப்பதால் முதுகெலும்பில் உள்ள உணர்திறன் நரம்புகள் உறைந்துபோகும். இந்த நரம்புகளின் மூலம்தான் மூளைக்கு செய்திகளை அனுப்பப்படுகின்றது.
இதனால் தலைவலி உண்டாகி சைனஸ் வரவும் வாய்ப்பு உள்ளது. ஜில்லென்ற நீரால் இதயத்துடிப்பு குறையும். இது வேகஸ் நரம்பை பாதிப்பதால் தான் இதயத்துடிப்பு குறையும் அபாயம் உண்டாகின்றது.
இதனால் இதயநோயும் உண்டாகலாம். உடலில் இருக்கும் கொழுப்புகள் குளிர் நீர் குடிப்பதால் கொழுப்பு இன்னும் பலமாக இருக்கும் கரையாது. இதனால் கெட்ட கொழுப்புகள் உடலில் சேர்ந்து உடல் எடை அதிகரிக்கும்.