போதையில் வடமாநில பெண் செய்த அட்டூழியம்.. தொடரும் போதை சம்பவங்கள்.. வைரலாகும் வீடியோ!
திருவள்ளூரில் போதையில் கார் ஓட்டிச் சென்று வடமாநில பெண் அடுத்தடுத்து சில கார்கள் மீது மோதியுள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு பணம் கொடுத்து மன்னிப்பு கேட்டுவிட்டு தொடர்ந்து மது போதையில் காரை ஓட்டியுள்ளார். இதனையறிந்த திருவள்ளூர் மாவட்ட போலீஸார் விரைந்து வந்து அப்பெண்ணின் காரை மடக்கியபோது, அவர் போதையில் இருந்ததும் ஓரகடத்துக்கு சென்று கொண்டிருந்ததும் தெரியவந்ததும்.
ஆனால் ஜீப்பில் சாய்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்த படி போலீஸாரிடம் ஆவேசமாகவும், ஆங்கிலத்திலும் வாக்குவாதம் செய்த அவர், தான் வாழ்க்கையில் எடுத்த மிகப்பெரிய தவறான முடிவு தமிழ்நாட்டுக்கு வர வேண்டும் என முடிவு செய்துதான் என புலம்பினார். மேலும், காரில் தான் செல்வேன் என அடம் பிடித்துள்ளார் அப்பெண்.
எனினும் அந்த பெண்ணின் செல்போனை வாங்கி, அவரது சென்னை நண்பர்களை வரவழைத்து பெற்றோரிடம் ஒப்படைக்க அறிவுறுத்திய போலீஸார் அப்பெண்ணின் ஜீப்பை மட்டும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, மேற்கொண்ட விசாரணையில், இவர் வடமாநிலத்தில் ஹரியானாவைச் சேர்ந்தவர் நித்து. திருமணம் ஆன இவரது கணவர் பெயர் நிகில் பாண்டே என கூறப்படுகிறது.
இன்ஜினீயரிங் படித்திருக்கும் நித்து பயிற்சிக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
இவருடன் திருவள்ளூர் மேல்நல்லாத்தூரில் ஓராண்டாக வடமாநில பெண் ஒருவர் பணியாற்றி வந்தார். அந்தப் பெண் மணவாள நகர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தம் நண்பர்களுக்கு விருந்தளிக்க முடிவு செய்ததை அடுத்து, அதில் பங்கேற்ற நித்து மது அருந்த, விருந்தில் மது அருந்தியதும் போதை தலைக்கேற, தன் காரில் அவர் ஓரகடத்துக்கு சென்றுள்ளார்.
அப்போது தான் இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளன. அப்போதும் காரில் தொடர்ந்து செல்ல வேண்டாம் என அறிவுறுத்தயுள்ளனர். இதனால் சமூக வலைத்தளங்களிலும் இந்த பெண் வைரலாகியுள்ளார்.