நீங்களும் அலுவலக இயந்திரத்திலிருந்து காபி குடிப்பீர்களா? ஆராய்ச்சி கூறிய உண்மை
இப்போதெல்லாம் காபி இயந்திரங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. மூளை சுறுசுறுப்பாக இருக்க காபி குடிப்பது வழக்கம். எனவே காபியை இலகுவாக குடிக்க அலுவலகங்களில் காபி இயந்திரங்களை வைத்து பயன்படுத்துகின்றனர்.
பெரும்பாலான மக்கள் அலுவலக இயந்திரத்திலிருந்து காபி குடிப்பார்கள், ஆனால் அது உங்கள் உடல்நலத்திற்கு கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான சேதத்தை ஏற்படுத்தும்.
இது ஆய்வில் தெரிவிக்கபட்ட உண்மை. ஒரு புதிய ஆராய்ச்சி அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த அலுவலக இயந்திர காபி இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதை விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
காபிக்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சி
ஆராய்ச்சியாளர்கள் நான்கு வெவ்வேறு அலுவலகங்களிலிருந்து 14 காபி இயந்திரங்களிலிருந்து மாதிரிகளை எடுத்து பகுப்பாய்வு செய்தனர். இந்த இயந்திரங்களில் மூன்று வகையான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.
சிலவற்றில் உலோக வடிகட்டி உள்ளது, சிலவற்றில் திரவ காபி செறிவு பயன்படுத்தப்படுகிறது. சிலவற்றில் உடனடி உறைந்த-உலர்ந்த காபி பயன்படுத்தப்படுகிறது.
இவை அனைத்தையும் வீட்டில் தயாரிக்கப்பட்ட காபியுடன் ஒப்பிடும்போது இதில் கேஃபெஸ்டால் மற்றும் கஹ்வியோல் இருப்பதை கண்டுபிடித்தனர். இது உடலில் அதிக அளவு கொழுப்பு மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் காரணியாகும்.
அலுவலக மெஷின் காப்பியை குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்
அலுவலக காபி இயந்திரத்திலிருந்து பெறப்படும் காபியில் கெட்ட' கொழுப்பு அதிகமாக்கப்படும்.
நாளொன்றுக்கு மூன்று அல்லது அதற்கு மேல் காபி குடித்தால் உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
எனவே அலுவலகத்தில் காபி குடிக்கும் ஊழியர்கள் இயந்திர காபியை குடிப்பதை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |