இறந்தவர்கள் கனவில் வந்தால் மரணம் தொடர்பான எச்சரிக்கையா?
கனவு என்பது பொதுவாக எல்லாருக்கும் வரக்கூடிய ஒன்று. கனவுகள் வராதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் ஏன் இந்த கனவு வருகின்றது என்பதில் எல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்கும்.
சில வேளைகளில் கனவுக்குரிய விளக்கம் தெரியாமல் குழம்பி போய் இருப்பார்கள். பொதுவாக கனவுகள் எமக்கு ஏதோவொரு விடயத்தை உணர்த்துவதற்காகவும் எம்மிடம் யாராவது கூற நினைக்கும் விடயங்களை கூறுவதற்காகவும் வரும் என்பது ஐதீகம்.
அப்படியான கனவுகள் என்ன என்ன என்பதையும் எதற்காக கனவுகள் தோன்றுகிறது என்பது பற்றியும் தெரிந்துக்கொள்வோம்.
தெய்வீக சம்பந்தப்பட்ட கனவுகள்
தெய்வீக சம்பந்தப்பட்ட கனவுகளில் எந்த கனவுகள் வந்தாலும் அது நமக்கு நன்மை தரக்கூடிய கனவுகள் தான் என்று சொல்லப்பட்டுள்ளது.
கோவிலில் மணி ஓசை உங்களது கனவில், உங்களது காதுகளில் கேட்டால், உங்களுக்கு இருக்கக்கூடிய தீராத பிரச்சனைகள் தீர போகிறது என்று அர்த்தம்.
ரயிலை தவறவிடுவது போன்ற கனவுகள்
நாம் ஏற வேண்டிய ரயிலை தவற விடுவது போன்று கனவுகள் தோன்றினால் இக்கனவுகள் மரணத்தைப் பற்றிய பயத்தை வெளியிடுகிறது. நாம் குறுகிய காலத்தில் இறந்து விடுவோம் என்று நம்முடைய கனவு எமக்கு உணர்த்துகிறது.
போர்க்களம் தொடர்பான கனவுகள்
எமது மனநிலை சரியான நிலைில் இல்லாத போது இந்த மாதிரியான கனவுகள் தோன்றும். இப்படியான கனவுகள் தோன்றினால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. மேலும் குழப்பத்தில் இருக்கும் மனதை அமைதிபடுத்த வேண்டும்.
இறந்தவர்கள் கனவில் வருதல்
நம்முடைய வீட்டில் யாராவது இறந்து இருப்பார்கள் அவர்கள் கனவில் தோன்றி ஏதோவொன்றை கூறுவது போன்று கனவு வந்தால் நாம் ஏதோவொரு பிரச்சினையில் இருக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்துகிறார்கள் என்பது அர்த்தம்.
இவற்றை கண்டறிந்து நிவர்த்தி செய்தோமானால் இப்படியான கனவுகள் வருவது குறையும்.