காருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்... ஹாலிவுட் பட பாணியில் அரங்கேறிய சம்பவம்
காருடன் வெள்ளத்தில் அடித்துச் சென்ற பெண்ணை ஊர் மக்கள் காப்பாற்றியுள்ள காணொளி டுவிட்டரில் வெளியாகியுள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய பெண்
ஹரியானாவின் பஞ்ச்குலாவில் காகர் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையல், பெண் ஒருவர் கோவிலுக்கு சென்று திரும்பி வந்த நிலையில், குறித்த வெள்ளத்தில் சிக்கியுள்ளார்.
நொடியில் காட்டாற்று வெள்ளமாக மாறிய இந்த சம்பவத்தில் குறித்த பெண் காருடன் அடித்துச் செல்லப்பட்டார். பின்பு பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட நிலையில், உள்ளூர் மக்கள் கயிறு கொண்டு ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு அப்பெண்ணைக் காப்பாற்றியுள்ளனர்
மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வரும் முன்னே கார் வெள்ளப்பெருக்கில் மாட்டிக்கொண்டுள்ளது.
உயிரைப் பணய வைத்து ஊர் மக்கள் காப்பாற்றிய காணொளி டுவிட்டரில் வைரலாகி வருகின்றது.
पंचकूला में पानी के तेज बहाव में महिला कार समेत नदी में बही, लोगों ने रस्सी के सहारे बचाई जान#Panchkula #Haryana #Rescue pic.twitter.com/ZoPpjqQVvI
— Uttam Hindu (@DailyUttamHindu) June 25, 2023