மறந்தும்கூட கூகுளில் இதை தேடாதீங்க! சிறைக்கு செல்ல நேரிடும்
ஒவ்வொரு நபரின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது கூகுள், காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் எது தேவையென்றாலும் கூகுளை நாடுபவர்கள் இல்லாமல் இல்லை.
நம் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு உலகத்தையே கையில் அடக்கிவிடலாம், அந்தளவுக்கு கூகுளில் அனைத்தும் கொட்டிக்கிடக்கிறது.
ஆனால் ஒரு சில வார்த்தைகளை பயன்படுத்தில் கூகுளில் நீங்கள் தேடினால், நிச்சயம் தண்டனை உண்டு என்று உங்களுக்கு தெரியுமா?
அவை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்,
வெடிகுண்டு தயாரிப்பது எப்படி?
ஆபத்தான வெடிகுண்டை சொந்தமாக நீங்களே தயாரிப்பது எப்படி என தேடினால் நிச்சயம் ஆபத்து உங்களை தேடிவந்துவிடும், எப்பொழுதும் வெடிகுண்டு தயாரிக்கும் முறைகள் பற்றி கூகுளில் தேடிப்பார்க்க வேண்டாம், அப்படி ஒருவேளை நீங்கள் தேடினால் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கும் பாதுகாப்பு அமைப்புகளால் அரசாங்கத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Shutterstock image
குழந்தைகள் பற்றிய ஆபாசம்
குழந்தைகள் பற்றிய ஆபாசமான படங்கள் குறித்த தேடல் உங்களை நிச்சயம் சிறைச்சாலைக்கு அனுப்பலாம்.
சட்டப்படி, இதுபோன்ற தேடல்கள் குழந்தைகள் மீதான வன்புணர்வுக்கு சமமான ஒன்று, போஸ்கோ சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதால் போலிசாரின் நடவடிக்கையும் தீவிரமானதாக இருக்கும், அவர்கள் குற்றவாளிகளாகவே கருதப்படுவார்கள்.
The Hindu photo library
கருக்கலைப்பு குறித்த தகவல்கள்
கருக்கலைப்பு பற்றி கூகுளில் தேடினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள், இந்தியாவில் கருக்கலைப்பு என்பது தண்டனைக்குரிய குற்றமாகும், முறையான மருத்துவ காரணங்களுடன் மருத்துவர்களுக்கு மட்டுமே இதற்கான அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
Shutterstock/STEKLO
Customer Care Number
ஏதாவதொரு அவசர தேவை என்றாலோ, நிறுவனங்களை மற்றும் வங்கிகளை தொடர்பு கொள்ள வேண்டும் என்றாலோ முதலில் நாம் தேடுவது Customer Care Numberகளை தான்.
ஆனால் இதனையே சாதகமாக ஹேக்கர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள் என்பது நினைவில் வைக்கவும்.
உதாரணத்திற்கு நீங்கள் வங்கி தொடர்பான எண்ணை தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், உடனே கூகுளில் காட்டப்படும் தவறான எண்ணை தொடர்பு கொண்டால் ஹேக்கர்கள் பண ரீதியாக ஏமாற்ற வழிகள் அதிகம்.
எனவே நிறுவனம் மற்றும் வங்கிகளின் சரியான URLயை தெரிந்து கொண்டு அதில் இருக்கும் தகவல்களை பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது.
இதேபோன்று மருந்துகள் பற்றி தேடுவதும் ஆபத்தான ஒன்றாக கருதப்படுகிறது, முறையான பயிற்சி பெற்ற மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையே உட்கொள்ள வேண்டும்.
தாமாகவே வியாதிக்கு மருந்தை எடுத்துக்கொள்வது தேவையில்லாத பின்விளைவுகளை கொண்டுவர நேரிடலாம்.
தீவிரவாத குழுவில் இணைவது எப்படி?
தீவிரவாத குழுக்கள் பற்றியும், அதில் இணைவது பற்றியும் தேடினால் நிச்சயம் தண்டனை உண்டு, உங்களை கண்காணித்துக்கும் கொண்டிருக்கும் பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாக உங்களை பற்றிய தகவல்களை அரசாங்கத்திற்கு வழங்குவார்கள், குற்றம் நிரூபணமானால் அதற்குரிய தண்டனை வழங்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.