இந்தப் பொருட்களை மறந்தும் கூட தானம் கொடுத்து விடாதீர்கள்: கையில் பணம் தங்காது
பொதுவாகவே தானம் செய்வது எமக்கு மன நிம்மதியளிக்கின்றது. மேலும் நாம் செய்யும் தானம் புண்ணியத்திற்காகவும் எமது கர்ம வினைகளை போக்குவதற்காகவும் கொடுக்கப்படுகின்றது என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது.
தானம் செய்வதால் தெய்வங்கள் மகிழ்ச்சியடைவதாகவும் ஒரு நம்பிக்கை உண்டு.
அந்த வகையில் நாம் ஒரு சில பொருட்களை தானமாக கொடுக்கக் கூடாது. அவைகள் என்ன என்பதை இந்த பதிவில் தெளிவாக காணலாம்.
தானம் செய்யக்கூடாதவை
நாம் ஒருவருக்கு தானம் செய்யும் போது பிளாஸ்டிக் பொருட்களை தானம் செய்யக்கூடாது ஏனெனில், எமது வீடு மற்றும் வியாபாரம் மற்றும் மேலதிக பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
இரும்புப் பாத்திரங்கள், கத்தி மற்றும் கத்திரிக்கோல் போன்றவற்றை யாருக்கும் தானமாக கொடுக்க கூடாது. அவை வீட்டின் அமைதியை கெடுத்து வீட்டில் ஒருவருடன் ஒருவர் சண்டைப் போட்டு பிரிவை சந்திக்க நேரும்.
நாம் கைகளில் கட்டும் கடிகாரங்களையும் தானமாக கொடுக்க கூடாது. இதனால் உங்கள் வாழ்க்கை மற்றும் தொழிலில் பிரச்சினைகள் ஏற்படும்.
நாம் வீட்டை சுத்தம் செய்யும் துடைப்பத்தை எப்போதும் யாருக்கும் தானமாக கொடுக்க கூடாது. அவ்வாறு தானம் செய்தால் பணப்பிரச்சினைகள் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
ஏன் தெரியுமா?
பெரும் நெருக்கடியான பண நெருக்கடிக்குள் தள்ளும்.
வீட்டில் ஒருவரோடு ஒருவருக்கு சண்டை, பிரிவு என்பன ஏற்படும்.
வீட்டில் இருக்கும் லட்சுமி தேவி வாசம் இல்லாமல் போய்விடும்.
தரித்திரத்தை ஏற்படுத்தும் என்பதால் தான் சில பொருட்களை நாம் தானம் செய்ய கூடாது என தெரிவிக்கப்படுகின்றது.