எலுமிச்சை தோலை தூக்கி எரிகிறவரா நீங்கள்? இனி அந்த தவறை செய்யாதீங்க
எலுமிச்சை தோலின் மூலம் சருமத்தை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
எலுமிச்சை
உடல் ஆரோக்கியம், சரும பராமரிப்பிற்கு எலுமிச்சை ஒரு வரப்பிரசாதமாக இருக்கின்றது. அதிலும் கோடை காலத்தில் எலுமிச்சை பானங்களைப் பருகுவதால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.
எலுமிச்சை ஆரோக்கியமும், சத்தும் நிறைந்திருப்பது போன்று, எலுமிச்சை தோலும் சரும பராமரிப்பிற்கு உதவுகின்றது.
வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த எலுமிச்சை தோல்கள் சருமத்தை பிரகாசமாக்குமாம்.
சரும பராமரிப்பிற்கு எலுமிச்சை தோலை எவ்வாறு நாம் பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
எலுமிச்சை தோலின் பயன்கள்
எலுமிச்சை தோலானது சருமத்திற்கு மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டாகச் செயல்படுவதுடன், இறந்த செல்களை நீக்கி சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் வைக்கின்றது.
வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை தோல், முகத்தில் படிந்திருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை நீக்குவதுடன், சருமத்தின் நிறம் சீராகவும், பொலிவாகவும் மாறும்.
எலுமிச்சை தோலில் இருக்கும் அஸ்ட்ரிஜெண்ட் பண்புகள் சரும உற்பத்தியை கட்டுப்படுத்தவும், முகத்தில் எண்ணெய் வடியாமலும், முகப்பருக்கள் வராமலும் தடுக்கின்றது. சருமத்திற்கு புத்துணர்ச்சியையும் அளிக்கும்.
இதிலுள்ள ஆன்டி மைக்ரோபியல் பண்புகள், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுகின்றது. இதனால் முகத்தில் கரும்புள்ளிகள், பருக்களிலிருந்து பாதுகாக்கின்றது.
எலுமிச்சை தோலில் உள்ள ஆக்சிஜனேற்றுகள் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கி, மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் போன்ற வயதான அறிகுறிகள் ஏற்படுவதை குறைப்பதுடன், சருமத்தை எப்போதும் இளமையாக வைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |