சனிக்கிழமைகளில் தவறியும் இந்த பொருட்களை வாங்காதீர்கள்... ஏன் தெரியுமா?
பொதுவாகவே இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் நாம் செய்யும் ஒவ்வொரு விடயத்திற்கும் ஒரு முறை காணப்படுகின்றது.
அந்த வகையில் எந்த கிழமைகளில் எந்த பொருட்களை வாங்க வேண்டும் எதனை தவிர்க்க வேண்டும் என்பது குறித்தும் இந்து சாஸ்திரம் வழியுறுத்துகின்றது.
இதன் அடிப்படையில் சனிக்கிழமையில் வாங்க கூடாத சில பொருட்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
தவிர்க்க வேண்டிய பொருட்கள்
சனிபகவானுக்கு உகந்த சனிக்கிழமையில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கக் கூடாது. இரும்பு என்பது சனிபகவானுடைய ஆதிக்கம் செலுத்தும் பொருளாகும்.
எனவே இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை சனிக்கிழமைகளில் வாங்க கூடாது.அப்படி வாங்கினால் குடும்பத்தில் தேவையில்லாத சண்டைகள், சச்சரவுகள் ஏற்படும்.
இரும்பு பொருளை தானமாக மற்றவர்களுக்கு சனிக்கிழமையில் வழங்கினால் கடன் தீரும் என்பது நம்பிக்கை. தீராத கடன் தீர சனிக்கிழமைகளில் இரும்பு பொருட்களை தாராளமாக தானம் செய்யலாம்.
சனி நீராடினால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. அதாவது சனிக் கிழமையில் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்தால் தோஷங்கள் நீங்கும். ஆனால் ஒருபோதும் சனிக்கிழமைகளில் எண்ணெய் வாங்க கூடாது.
சனிக்கிழமையில் எப்பொழுதும் உப்பு வாங்காதீர்கள். வெள்ளிக்கிழமைகளில் வாங்குவதுதான் சிறப்பு. சனிக்கிழமையில் உப்பு வாங்கினால் தொழில் மற்றும் வியாபாரத்தில் பாரிய நட்டம் ஏற்படும்.
வீட்டை சுத்தம் செய்யக் கூடிய பொருட்களை சனிக்கிழமையில் வாங்கக்கூடாது. சனி பகவானுக்குரிய எள்ளையும் சனிக்கிழமையில் வாங்கக் கூடாது.
ஆனால் எள் எண்ணெய் கொண்டு சனி பகவானுக்கு தீபம் ஏற்றினால் சகல செல்வாக்கும் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |