சுயநினைவு இழந்த குட்டியுடன் Pet Clinic வந்த நாய்- இணையவாசிகளை மிரள வைத்த காணொளி
சுயநினைவு இழந்த குட்டியுடன் Pet Clinic வந்த நாயின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக சமூக வலைத்தளங்களில் விலங்குகள் செய்யும் குறும்புகள் காணொளியாக பகிர்வது வழக்கம். இதனை சில பயனர்கள் வேலையாகவே செய்து வருகிறார்கள்.
அவர்களுக்கு ஏற்றால் போல் விலங்குகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றது.
அந்த வகையில், துருக்கியில் மழையில் நனைந்த சுயநினைவு இழந்த தனது குட்டியை காப்பாற்ற நினைத்த தாய் நாய் ஒன்று அதனை வாயால் கௌவியப்படி Pet Clinic வந்துள்ளது.
குட்டி நாயின் நிலையை பார்த்த மருத்துவர்கள் உடனே அதனை சிகிச்சையளிக்கும் இடத்திற்கு அழைத்து சிகிச்சை கொடுத்துள்ளனர்.
நாயின் இந்த செயல் இணையவாசிகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன், “நாயாக இருந்தாலும் குழந்தை என வரும் பொழுது இப்படி தான் யோசிக்கும்..” என்று கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.
உலகம் முழுவதும் வைரலாகிக் கொண்டிருக்கும் வீடியோ
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) January 20, 2025
துருக்கியில் மழையில் நனைந்த சுயநினைவு இழந்த தனது குட்டியை தூக்கிக் கொண்டு பெட் கிளினிக்கு வந்த தாய்நாய்#viralvideo pic.twitter.com/NBQmksdKjG
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |