3 ஆண்டுகளாக பாழடைந்த கிணற்றுக்குள் வாழ்ந்த நாய்: உயிருடன் மீட்கப்பட்ட சந்தோஷ தருணம்
தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கிணற்றுக்குள் தவறி விழுந்த நாயை தற்போது உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்து காவலர் குடியிருப்பு பகுதியில் 60 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றில் நாய் ஒன்று எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளது.
குறித்த நாய் கட்டிட தொழிலாளி ஒருவர் வளர்த்து வந்த நாயாகும். குறித்த நாயை அவர் கிணற்றிலிருந்து மீட்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்ததால், பின்பு நாயை அங்கேயே விட்டுவிட்டு வீட்டை காலி செய்து சென்றுள்ளார்.

அவ்வப்போது நாயின் சத்தம் கேட்டால் அக்கம்பக்கத்தினர் ஏதாவது உணவினை கிணற்றுக்குள் போட்டுவிட்டுச் செல்வார்களாம். குறித்த நாயும் அதனை சாப்பிட்டுவிட்டு இருந்துள்ளது.
இவ்வாறு 3 ஆண்டுகள் கடந்த நிலையில், சமூகஆர்வலர் கண்ணில் குறித்த நாய் படவே உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து அவர்கள் வந்த நாயை மீட்டதோடு, அதற்கு பிஸ்கட் தண்ணீர் கொடுத்துள்ளனர்.
3 ஆண்டுகளாக இவ்வாறு கிணற்றுக்குள் இருக்கும் நாயை மீட்க யாராவது முன்வந்து தீயணைப்பு வீரர்களிடம் கூறினால் அப்பொழுதே நாய் காப்பாற்றப்பட்டிருக்கும் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.