Viral video: இந்தா pose.. மாடல்களை ஓரங்கட்டி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த நாய்க்குட்டி
மாடல்களை ஓரங்கட்டி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த நாய்க்குட்டியின் காணொளி சமூக வலைத்தளங்களில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தா pose..
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் விலங்குகளின் அலப்பறை காணொளிகள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில், உரிமையாளருடன் தெருவில் நடைப்பயிற்சி சென்றுக் கொண்டிருந்த நாயை பார்த்த ஒருவர், “இந்த நாய் அழகாக இருக்கிறதே..” என அவருடைய தொலைபேசியில் புகைப்படம் எடுக்கிறார்.
இதனை கவனித்த நாய், அந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஒவ்வொரு புகைப்படத்திற்கு அதற்கு ஏற்றால் போல் போஸ்க் கொடுக்கிறார். அந்த நாயின் அலப்பறைகள் இன்னொரு கேமராவில் பதிவாகிக் கொண்டிருக்கிறார்.
நாயின் உரிமையாளர் தெருவில் பார்த்த இன்னொருவருடன் பேசிக் கொண்டே நாயின் அலப்பறையை பார்த்துக் கொண்டிருக்கிறார். நாய்கள் இப்படி செய்வது வேடிக்கை ஏற்படுத்தியுள்ளது.
காணொளியை செல்பி பிரியர்களுக்கு பகிர்ந்து இணையவாசிகள் கலாய்த்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |