ஃபேஷன் ஷோவில் கலக்கிய செல்லப்பிராணிகள்... பிரமிக்க வைத்த அழகைப் பாருங்க
செல்லப்பிராணிகளான நாய்கள் ஃபேஷன் ஷோவில் மாடர்னாக வலம்வரும் காட்சிகள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது.
செல்லப்பிராணிகள் தற்போது குழந்தைகளுக்கு நிகராக தன்னுடைய உரிமையாளர்களால் வளர்க்கப்பட்டு வருகின்றது.
மேலும் பெற்றோர்களை விட செல்லப்பிராணிகளே வீட்டிலிருக்கும் குழந்தைகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் செய்யும் காணொளிகள் இணையத்தில் அதிகமாகவே வலம்வருகின்றது.
குழந்தைகளைப் போன்று நாயை பார்க்கும் உரிமையாளர்கள் அதனை பேஷன் ஷோவிலும் கலந்து கொள்ள வைத்து அழகு பார்க்கும் காட்சியை தான் இங்கு காணப்போகின்றோம்.
விதவிதமாக அழகு படுத்தப்பட்டும், அலங்கரிக்கப்பட்டும் வரும் அழகினை natureferver என்ற இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. இக்காட்சியில் எதிர் எதிரே இரு அறைகள் இருக்க, இரு அறைகளில் இருந்தும் நாய்கள் ஒவ்வொன்றாக கேட்வாக் செய்துகொண்டு வருகின்றன. அவை கேமராவுக்கு மிக அருகில் வந்து க்ளோஸ் அப்பில் தங்கள் முகத்தை காட்டிவிட்டு செல்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |