நாயை உயிருடன் புதைத்த மூதாட்டி! இதெல்லாம் ஒரு காரணமா?
தற்போது எல்லோர் வீட்டிலும் செல்லப்பிராணிகள் வளர்க்கப்படுகின்றன. செல்லப்பிராணிகளை தங்கள் குழந்தைகளைப் போல் வளர்ப்பவர்கள்தான் அதிகம்.
சிலருக்கு செல்லப்பிராணிகள் என்றால் உயிர் என்று சொல்லலாம். ஆனால், ஒரு சிலருக்கு செல்லப்பிராணிகள், அதன் சத்தம், அதன் கழிவு என்பன சுத்தமாக பிடிக்காது.
பிரேசிலில் ப்ளானுரா பகுதியில் 82 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வரும் நிலையில் அவரது பக்கத்து வீட்டில் ஒரு பெண் நீனா என்ற நாயொன்றை வளர்த்து வந்திருக்கிறார்.
குறித்த நாய் தினமும் இரவில் குரைத்துக் கொண்டேயிருந்த நிலையில், ஆத்திரமடைந்த மூதாட்டி, அந்த நாயை தனது தோட்டத்திலேயே இரவோடு இரவாக குழி தோண்டி புதைத்துள்ளார்.
தான் செல்லமாக வளர்த்த நாயைக் காணாத உரிமையாளர் பெண், மூதாட்டியிடம் விசாரிக்கவே, நடந்ததை கூறியுள்ளார்.
சுமார் ஒன்றரை மணி நேரமாக குழிக்குள் பரிதவித்த நாய், பத்திரமாக மீட்கப்பட்டது.
குறித்த அந்த மூதாட்டி அந்த நாய் இனி இந்தப் பக்கம் வரவே கூடாது என நீனாவின் உரிமையாளரை மிரட்டியுள்ளார்.
காவல் துறையினர் விசாரித்தபோது கூட, மீண்டும் குரைத்தால் மறுபடியும் குழி தோண்டி புதைப்பேன் என கூறியுள்ளார்.
விலங்குக்கு வதை செய்த குற்றத்துக்காக குறித்த மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.