மெசேஜ்களை வாட்ஸ்ஆப் நிறுவனம் பார்க்கிறதா? குழப்பத்தில் நெட்டிசன்கள்
பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் உலகக் கோப்பை கால்பந்து போட்டி சமயத்தில் வாட்ஸ்ஆப்பில் சாதனை அளவாக விநாடிக்கு 2.5 கோடி மெசேஜ்கள் அனுப்பப்பட்டதாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த சமூகவாசிகள் பெரும் குழப்பமடைந்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவை கண்ட ஒருவர் “எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன் என்கிறீர்கள், உங்களுக்கு எப்படி இது தெரியும்” என கேட்டு கமெண்ட் செய்ததை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர்.
மேலும் அவரது பதிவுக்கு மென்பொறியாளர்கள் பலரும் பதிலளித்துள்ளனர்.
அதில் ஒருவர், “அவர் எண்ணிக்கையைப் பற்றி மட்டுமே சொல்கிறார். செய்திகளின் உள்ளடக்கத்தைப் பற்றிச் சொல்லவில்லை. எண்கள் பகுப்பாய்வு வகைகளில் வரும். இது அனைத்தும் தளங்களிலும் பொதுவானது தான்.” என கூறியுள்ளார்.
இது தற்போது பெரும் சர்சையாக கிளம்பியுள்ளது.