நள்ளிரவில் விழிப்பு வருகிறதா? இதை கட்டாயம் செய்திடுங்க
நள்ளிரவில் திடீரென கண்விழிப்பு ஏற்பட்டு தூக்கத்தை கெடுத்துவிடும். அவ்வாறான சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக இரவில் 8 மணி நேரம் கட்டாயமாக தூங்க வேண்டும். இவ்வாறு தூங்குவதை தான் மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆனால் திடீரென நள்ளிரவில் விழிப்பு ஏற்பட்டு விட்டால் அதன் பின்பு தூங்க முடியாமல் பலரும் திணறி வருகின்றனர்.
இவ்வாறு கண்விழிப்பதற்கு பல காரணங்கள் உள்ளது... அதாவது ஏதாவது ஒரு விடயத்தை நினைத்து கவலை அடைவது, வேறு சிந்தனையில் தூங்க செல்வது இவ்வாறான எண்ணங்கள் தூக்கத்தை பாதிப்புக்குள்ளாக்குமாம்.
என்ன செய்ய வேண்டும்?
தினமும் இரவில் குறிப்பிட்ட நேரத்திற்குள் தூங்குவதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது 9 அல்லது 10 மணிக்குள் தூங்க செல்ல வேண்டும்.
தூங்குவதர்கு முன் தியானம் அல்லது ஆழமாக மூச்சை உள் இழுத்து வெளியிடும் ஆழ்ந்த சுவாச பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு உணவு உண்ண வேண்டும்.
தூங்கும் அறை வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்தும், காற்றோட்டம் கொண்டதாக பார்த்து கொள்ள வேண்டும்.
தூக்கத்தின்போது திடீரென இரவில் கண் விழித்து எழுந்தால் மணி பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
