காதலை சொன்ன இடத்திற்கே சென்று உயிரை விட்ட நபர்! அரங்கேறிய சோக சம்பவம்;
27 வருடம் கழித்து தன் காதலியிடம் காதலை சொன்ன இடத்திற்கே நபர் ஒருவர் உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இங்கிலாந்தின் அல்ட்ரிஞ்சம் பகுதியை சேர்ந்தவர் Dr.ஜேமி பட்லர் (Jamie Butler 54). இவரது மனைவி ஸ்ட்ரைடிங் எட்ஜ். இந்த தம்பதிகளுக்கு இரண்டும் இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
திருமணமாகி பல வருடங்கள் ஆன நிலையில் தன் மனைவிக்கு காதலை வெளிப்படுத்த ஆசைப்பட்டுள்ளார். அதன்படி இருவரும் முதன் முதலில் காதலை வெளிப்படுத்திய இடமான மலை உச்சிக்கு சென்றுள்ளனர்.
அப்போது மனைவி ஒரு இடத்தில் களைத்துபோய் உட்கார்ந்திருக்க, கணவனோ சும்மா இல்லாமல் காதலை சொன்ன இடத்தை தேடிச் சென்றுள்ளார். வெகுநேரமாகியும் கணவனை காணததால், எல்லா இடமும் தேடிச்சென்றுவிட்டு காவல் துறையினருக்கு தகவல் அளித்திருக்கிறார்.
அவரை தேடிய மீட்பு படையினர்கள், மலை உச்சியில் இருந்து கீழே கிடப்பதை கண்டுள்ளனர். பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து, பட்லர் உயிரிழந்த நேரத்தில் அவர் கால் பந்து அணியில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது அவரின் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனால் மனமுடைந்து அவரை உயிரை மாய்த்துகொண்டாரா? என நீதிமன்ற விசாரணை நடக்கையில், அவர் அப்படி எதுவும் செய்யவில்லை தவறி தான் விழுந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
மேலும், காதல் கணவர் இப்படி உயிரிழந்த சோகத்தால் மனைவி பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.