பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் தினமும் சாப்பாடு என்ன தெரியுமா..?
சச்சின் டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய உணவு அட்டவணையைக் ஒன்றை வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர்
இந்திய கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் உலகம் முழுவதும் ரசிகர்களின் மனதை வென்றவர்களில் சச்சின் டெண்டுல்கர் முதன்மையானவர்.
1989-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் நடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சச்சின் தனது முதல் சர்வதேசப் பயணத்தைத் தொடங்கினார். அன்றிலிருந்து இன்று வரையில் சச்சினின் சாதனை பலருக்கும் எட்ட முடியாத ஒரு மைல்கல்லாகவே இருக்கிறது.
ஒரே ஆண்டில் 1000 ரன்களுக்கும் அதிகமாக எடுத்த ஒரே கிரிக்கெட் பேட்ஸ்மேன் சச்சின் ஆவார். இதுவரையில் இச்சாதனையை எந்தவொரு பேட்ஸ்மேனும் எட்டவில்லை.
ஒரு நாள் போட்டிகள் கிரிக்கெட் வரலாற்றில் சச்சினின் அதிகப்பட்ச ரன்கள் 18426 ஆகும்.
வைரல் வீடியோ
இந்நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் அவரது முன்னால் ஒரு மோசை முழுக்க உணவு வைக்கப்பட்டிருந்தது.
அதில் சாதம், கறி, வதக்கிய காய்கறிகள் மற்றும் பல உணவுகள் இருந்தன. கையில் ஒரு வடா பாவை வைத்துக் கொண்டு, தனது நாள் தொடங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மும்பையில் மதிய உணவோடு தனது நாளைத் தொடங்கியதாகவும், பின்னர் 2023 டி20 சர்வதேச போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் போட்டிக்காக அகமதாபாத்திற்குச் சென்றுள்ளதாகவும் அங்கு அவர் தேநீர் மற்றும் சிற்றுண்டி சாப்பிட்டு போட்டியை முடித்துக் கொண்டு கோவாவுக்குச் சென்று இரவு உணவு சாப்பிட்டுள்ளார் எனவும் கூறியிருந்தார்.
அதுமட்டுமின்றி "எனது காலை உணவு எங்கே இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?" என்று ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் பெரிதும் வைரலாகி வருகின்றது.