பாம்புகளுக்கான இந்தியாவின் கிராமம் பற்றி தெரியுமா? விஷப் பாம்புகளுடன் வாழும் மக்கள்!
பொதுவாகவே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குக்கிராமத்திற்கும் அதன் சொந்த மரபுகள், மற்றும் கதைகள் நிச்சயம் இருக்கும். ஆனால் ஷெட்பால் கிராமம் நீங்கள் இதுவரை கேள்விப்படாத விசித்திரமான ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
காரணம் பாம்புகள் என்றால் படையே நடுங்கும் என்று பழமொழியே இருக்கின்றது. பாம்புகள் என்றால் மனிதர்களுக்கு ஒரு இனம் புரியாத பயம் இருக்கத்ததான் செய்கின்றது. பெரும்பாலும் பாம்பை கண்டு பயப்படாதவர்கள் மிக மிக அரிது.
ஆனால் மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூர் மாவட்டத்தின் மோஹோல் தாலுகாவிற்கு உட்பட்ட ஷெட்பால் கிராமத்தில் மக்கள் பாம்புகளுடன் தான் வாழ்ந்து வருகின்றனர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் ஷெட்பால் கிராமத்தில்தான் இப்படியான ஒரு வினோத பழக்கம் காணப்படுகின்றது.
வினோத கிராமம்
இந்த கிராமத்து மக்கள் பாம்புகளை கண்டு பயப்படுவதே கிமையாது. அதை குடும்பத்தில் ஒருவராக நடத்துகிறார்கள். உணவளிப்பது, பாம்புகளுடன் விளையாடுவது மட்டுமன்றி தங்களது வீடுகளில் அவற்றிக்கென்று தனி இடத்தையும் அமைக்கின்றனர்.
ஷெட்பால் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பாம்பிற்காக தனி இடத்தையே ஒதுக்கி வைத்திருப்பார்கள். குறிப்பாக நாகப்பாம்புகளுக்காக ஒரு மூலை ஒதுக்கப்படுகிறது.
அந்த இடத்தில் பாம்புகள் வந்து வசித்துவிட்டு போகும். கிராமத்தில் உள்ள குழந்தைகளும் பாம்புகளுக்கு பயப்படுவதில்லை, ஏனெனில் பாம்புகளோடு தான் அவர்கள் வளர்கிறார்கள்.
குழந்தைகள் அவற்றுடன் விளையாடுவதோடு பாம்புகளை தங்களோடு பள்ளிக்கும் அழைத்துச் செல்கின்றனர். பாம்புகள் கிராமத்தில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன, கிராமவாசிகள் யாரும் அவற்றைத் துன்புறுத்துவதில்லை.
அதேபோல பாம்புகளும் மக்களை எதுவும் செய்வதில்லை. புதிதாக அந்த கிராமத்துக்கு செல்பவர்களுக்கு தான் அதை பார்க்கும் போது வினோதமாகவும் பயமாகவும் இருக்கும் ஆனால் இந்த கிராம வாசிகளுக்கு அது சாதாரண விடயமாகவே இருக்கின்றது.
அந்த இடத்தை தேவஸ்தானம் என்றும், அங்கு பால், முட்டைகளை வைத்து பாம்புகளை வழிபடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் நாகபஞ்சமியன்று தவறாமல் நாக வழிபாடு நடத்துகின்றனர். கொடிய விஷமுடைய பாம்புகளை செல்லப்பிராணிகளாக நினைத்து பார்த்துக்கொள்கின்றார்கள்.
இங்கு ராஜ நாகங்கள் முதல் அனைத்து வகையான பாம்புகளும் காணப்படுகின்றன. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்ற கூற்றுக்கும் இந்த கிராமத்துக்கும் சம்மந்தமே இல்லாதது போல் இவர்கள் வாழ்கிகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |