ஜேம்ஸ் கேமரூனின் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஜேம்ஸ் கேமரூனின் ஆண்டு வருமானம் எவ்வளவு என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
ஜேம்ஸ் கேமரூன்
கனடாவின் ஆன்டாரியோ மாநிலத்தில் (1954) பிறந்தவர்.
ஸ்டாம்ஃபோர்டு காலேஜியேட் பள்ளி, ட்ரோனி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.
அறிவியல் புனைகதைகள் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.
17 வயது இருந்தபோது குடும்பம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடியேறியது. ஃபுல்லர்டன் கல்லூரியில் இயற்பியல் படிப்பில் சேர்ந்தார்.
படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட சில வேலைகளை செய்தார். சினிமா, போட்டோகிராபி தொடர்பான சில தொழில்நுட்பங்களைக் கற்றார்.
அறிவியல் புனைகதை திரைப்படங்களில் ஸ்பெஷல் எஃபெக்ட் மேலாளராகவும், உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.
திரைப்பட பயணம்
அதன் பின் 1982இல் வெளியான ‘Piranha II: The Spawning’ தான் கேமரூன் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம்.
பின்னர் டெர்மினேட்டர், ஏலியன்ஸ், தி அபைஸ், டெர்மினேட்டர் 2, ட்ரு லைஸ் மாதிரியான படங்களை எடுத்தவர் ஹாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனராக உருவானார்.
இதன் டைட்டானிக் மூலம் உலகளவில் சினிமா ரசிகர்களின் மனதை வென்றார்.
2009 இல் வெளிவந்த அவதார் மூலம் பட்டையை கிளப்பியிருந்தார் .
25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலர்கள் வசூலை அள்ளியது.
கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் 52,000 திரைகளில் டிசம்பர் 16 ஆம் திகதி வெளியாகி இதுவரை ரூ.18,200 கோடியையும் இந்தியாவில் ரூ.500 கோடியையும் வசூலித்துள்ளது உலகளவில் சாதனை படைத்தது.
வருமானம்
இந்நிலையில் சமீபத்தில் போர்ப்ஸ் பத்திரிகை 2022 ஆம் ஆண்டில் அதிக வருமானத்தை ஈட்டிய கலைஞர்கள் பட்டியலை வெளியிட்டது.
அதில் ஜேம்ஸ் கேமரூன் 95 மில்லியன் டாலர்களுடன் (ரூ.727 கோடி) 8-வது இடத்தையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.