சமையலுக்கு எந்த எண்ணெய்யை பயன்படுத்துறீங்க? ஆரோக்கியத்தை குறித்து தெரிஞ்சிக்கோங்க

Heart Attack
By Manchu Nov 24, 2026 05:00 PM GMT
Report

Best Oil for Cooking: நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்களில் எந்தெந்த எண்ணெய்கள் ஆரோக்கியமானது என்பதை தெரிந்து கொள்வோம்.

பொதுவாக வீட்டில் சமையல் என்றாலே அங்கு எண்ணெய் கட்டாயம் இருக்க வேண்டும். குழம்பு, காய்கறிகளை வதக்குவது, தோசை சுடுவது, பலகாரங்கள் சுடுவது என அனைத்திற்குமே எண்ணெய் அவசியமாக இருக்கின்றது.

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் பனை ஓலை கொழுக்கட்டை

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் பனை ஓலை கொழுக்கட்டை

சமையலுக்கு நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் இவற்றினை பயன்படுத்திவரும் நிலையில் எந்த எண்ணெய் ஆரோக்கியமானது என்பதை தெரிந்து கொள்வொம்.

நாம் சமைக்கும் எண்ணெய்யில் மூன்று வகையான கொழுப்புகள் இருக்கின்றது. நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat), ஒற்றை நிறைவுறா கொழுப்பு (MUFA), பல்நிறைவுறா கொழுப்பு (PUFA) ஆகியவை ஆகும்.

சமையலுக்கு எந்த எண்ணெய்யை பயன்படுத்துறீங்க? ஆரோக்கியத்தை குறித்து தெரிஞ்சிக்கோங்க | Do You Know Best Oil For Cooking Your Kitchen

நன்மை அளிக்கும் சமையல் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்யில் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகமாக உள்ள நிலையில், இதனை பயன்படுத்தும் போது LDL கொழுப்பு அதிகரிப்பது தெரியவந்துள்ளது. ஆகவே சுவைக்காக குறைவாக எடுத்துக் கொள்ளலாம்.

பாமாயிலில் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகமாக உள்ளது. கடைகளில் தயாரிக்கப்படும் பஜ்ஜி, போண்டா இவற்றில் தான் செய்யப்படுகின்றது. ஆகவே கவனமாக சாப்பிடவும்.

நல்லெண்ணெய்யில் MUFA மற்றும் PUFA கொழுப்புகள் சமநிலையில் உள்ள நிலையில், இதனை குழம்பு மற்றும் தாளிப்பு, இட்லி பொடி இவற்றிற்கு சிறந்ததாகும்.

சமையலுக்கு எந்த எண்ணெய்யை பயன்படுத்துறீங்க? ஆரோக்கியத்தை குறித்து தெரிஞ்சிக்கோங்க | Do You Know Best Oil For Cooking Your Kitchen

கடலை எண்ணெய்யில் ஒற்றை நிறைவுறா கொழுப்புகள் உள்ளதால், இவற்றினை தோசை, பொரியல் செய்வதற்கு ஏற்ற தேர்வாக இருக்கின்றது.

ரைஸ் பிரான் ஆயிலில் மூன்று வகையான கொழுப்புகளும் சமநிலையில் உள்ளது. இதிலுள்ள ஒரிசனால் கெட்ட கொழுப்பினை குறைக்க உதவுகின்றது.

சூரிய காந்தி எண்ணெய்யில் பல்நிறைவுறா கொழுப்புகள் அதிகமாக உள்ளதால், சரியான அளவில் பயன்படுத்தி சமையல் செய்யலாம்.

சமையலுக்கு எந்த எண்ணெய்யை பயன்படுத்துறீங்க? ஆரோக்கியத்தை குறித்து தெரிஞ்சிக்கோங்க | Do You Know Best Oil For Cooking Your Kitchen

நெய் மற்றும் வெண்ணெய் இவற்றில் நிறைவுற்ற கொழுப்பகள் அதிகமாக இருப்பதால் அளவாக பயன்படுத்துவது சிறந்தது. மேலும் வனஸ்பதியில் டிரான்ஸ் கொழுப்பு இருப்பதால், இதய ஆரோக்கியத்தில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.

உடல் உழைப்பு குறைவாக உள்ளவர்கள் நாள் ஒன்றிற்கு 20 கிராம் எண்ணெய் பயன்படுத்தலாம். ஆண்களுக்கு சுமார் 30 கிராம் எண்ணெய் தேவைப்படுகின்றது. ஒரு ஸ்பூன் எண்ணெய் சுமார் 5 கிராம் இருக்குமாம்.

தேங்காய் எண்ணெய், நெய்யை சுவைக்காக எடுத்துக் கொண்டு, நல்லெண்ணெய், கடலை எண்ணெய், ரைஸ் பிரான் ஆயில் ஆகியவற்றினை மாற்றி மாற்றி பயன்படுத்தவும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US