முட்டையை கழுவாம சமைக்கிறீங்களா? இதெல்லாம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
முட்டையை கழுவாமல் சமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முட்டை
சத்துக்கள் அதிகம் கொண்ட உணவுகளில் முக்கியமானது முட்டை ஆகும். முட்டையை அவித்தும், ஆம்லேட், குழம்பு என செய்து சாப்பிடும் வழக்கம் நம்மிடையே உள்ளது.
முட்டையை சமைக்கும் முன்பு நாம் சில தவறுகளை செய்வது கூடாது. அதாவது கடைகளில் பேக் செய்யப்பட்ட அல்லது கடையில் வாங்கும் முட்டைகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட்டிருக்கும்.
ஆனால் சந்தைகள், பண்ணைகள் இவற்றில் வாங்கும் முட்டை கிருமி நீக்கம் செய்யாமல் அப்படியே விற்கப்படுகின்றது. அதனால் முட்டையை சமைக்கும் முன்பு கட்டாயம் கழுவி சமைக்க வேண்டியது அவசியம் ஆகும்.

ஏன் கழுவ வேண்டும்?
முட்டை ஓடுகளில் உள்ள அழுக்கு, தூசி, கோழி இறகுகள், அவற்றின் எச்சம் இவைகள் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்களை கொண்டு வருகின்றது. இதனால் வயிறுவலி, வாந்தி, ஃபுட் பாய்சன் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
முட்டை ஓடுகள் கடினமாக இருந்தாலும், அதில் உள்ள சின்ன சின்ன துளைகள் வழியாக பாக்டீரியா சுலபமாக உள்ளே போய்விடுமாம்.

ஆதலால் குளிர்ந்த நீரில் முட்டையை நன்றாக கழுவ வேண்டும். கழுவிய பின்பு காய்ந்த துணி, டிஸ்யூ பேப்பர் கொண்டு கொண்டு துடைத்து எடுக்கவும்.
முட்டையை அதிக நாட்கள் ஃப்ரிட்ஜில் வைப்பது கூடாது. ஏனெனில் இவை பாக்டீரியா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துவிடும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |