ஊனமாக பிறக்கும் குழந்தைகள்! தப்பி தவறிக்கூட இவர்களை திருமணம் செய்யாதீங்க
சில குடும்ப வழக்கங்களின் படி நெருங்கிய சொந்தங்களில் திருமணம் செய்தால் குழந்தை பிறக்கும் போது அது ஊனமாக பிறக்கும் என்று கூறுவதை நாம் கேள்விப் பட்டிருப்போம்.
ஊனமாக குழந்தை பிறப்பதற்கான காரணம்
ஆம். இது உண்மையான விடயம், இதனை சிலர் மருத்துவ ஆராய்ச்சிகளின் மூலம் ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளார்கள்.
மேலும் நெருங்கிய சொந்தங்களில் திருமணம் செய்யும் போது தம்பதிகளிடையே மூதாதையரிகளின் மரபணுக்கள் பரிமாற்றப்படுகிறது. இந்த மரபணுக்கள் தான் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சொந்தத்தில் திருமணம் வேண்டாம்
கடந்த காலங்களில் இவ்வாறு திருமணம் செய்துக் கொள்வதை குடும்ப வழக்கமாக கொண்டிருந்தனர். இதனால் குடும்பத்தில் அடுத்து வரும் சந்ததியினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக பல முன்னெச்சரிக்கை அமைப்புகள் விழிப்புணர்வு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து சமீப காலமாக இது போன்ற திருமணங்கள் நடை பெறுவது குறைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.