இந்த தினங்களில் பத்திகளை கொளுத்தக் கூடாது... ஏன் தெரியுமா?
பொதுவாகவே வீடுகளில் வாசனைக்காகவும் பூஜைக்காகவும் மிகவும் மணமாக இருக்கும் பத்திகளை வீடுகளில் கொளுத்துவோம். இதன் நறுமணம் வீட்டிற்குள் நுழையும் போது கோவிலுக்குள் நுழைவது போல ஒரு உணர்வைக் கொடுக்கும்.
மேலும், இந்தப் பத்திகளை கொளுத்துவது இறைவனை மகிழ்ச்சியாக்குவதற்கு என்றும் சொல்லுவார்கள். அதுமட்டுமல்லாமல் வீடுகளில் பத்தியைக் கொளுத்தும் போது வீடுகளில் இருக்கும் எதிர்மறை சக்திகள் இல்லாமல் செய்யும் என்றும் சொல்லப்படுகிறது.
இப்படி பத்திகளை கொழுத்தும் போது வாஸ்து சாஸ்த்திரத்தின் படி இரண்டு நாட்களுக்கு பத்தி கொளுத்தவே கூடாதாம் அப்படி செய்தால் என்னனென்ன நடக்கும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பத்தி கொளுத்தினால் அசுபமா?
பத்தியை ஞாயிற்றுக் கிழமையும் செவ்வாய்க் கிழமையும் கொளுத்துவது அசுபமானது சொல்கிறது வாஸ்து சாஸ்த்திரம்.
இவ்வாறு இந்த இரண்டு நாட்களில் பத்தி கொளுத்தினால் முன்னோர்களின் கோபத்திற்கு ஆளாகுவோம் என்றும் இதனால் குடும்பம் வறுமைக்கு சென்று விடும் என்றும் சொல்லப்படுகிறது.
பத்தி குச்சிகளை செய்வதற்கு மூங்கில் குச்சிகள் தான் பயன்படுத்தப்படுகிறது இந்த மூங்கிலானது இந்து மதத்தில் புனிதமாக பார்க்கப்படுகிறது.
இந்த மூங்கிலானது நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்துகிறது, இதனால் பலரும் வீடு மற்றும் அலுவலகம், கடைகளிலும் கூட இந்த மூங்கில் அதிஷ்டத்திற்காக வைக்கப்படுகிறது.
இதனால் தான் ஞாயிற்றுக் கிழமையும் செவ்வாய்க் கிழமையும் மூங்கில் குச்சிகளை எரிக்க கூடாது. அதிர்ஷ்டத்தில் பல்வேறு தடைகள் ஏற்பட்டு குடும்பத்தில் வறுமை ஏற்படலாம். குடும்பத்திலும் சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.
ஆகவே இந்த இரண்டு நாட்களில் பத்திக்கு பதிலாக தீபம் அல்லது கற்பூரம் ஏற்றி வழிபடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |