வலுக்கை தலையிலும் புதிய முடி முளைக்கனுமா? இதை ஒரு துளி விட்டு தடவுங்க!
நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவது முதல் புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிப்பது வரை பல வழிகளில் முடிக்கு நன்மை பயக்கிறது.
நெல்லியில், வைட்டமின் சி மற்றும் டானின்கள் நிறைந்துள்ளன.
இதன் ஊட்டமளிக்கும் பண்புகள் கூந்தலுக்கு இயற்கையான கண்டிஷனராக்கி, கூடுதல் மென்மையான அமைப்பைக் கொடுக்கும்.
நெல்லியில் உள்ள வைட்டமின் சி கொலாஜனை உற்பத்தி செய்ய உதவுகிறது. இது முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
நெல்லிக்காய் எண்ணெய் எப்படி செய்வது?
- செய்முறை 2 நெல்லிக்கனிகளை ஒவ்வொன்றும் 4 துண்டுகளாக வெட்டி அவற்றை குறைந்தது 1 மணிநேரம் நிழலில் உலர வைக்கவும்.
- நெல்லியின் காய்ந்த துண்டுகளுடன் 2 தேக்கரண்டி எள் எண்ணெய் (sesame oil) மற்றும் 4 தேக்கரண்டி எக்ஸ்ட்ரா வர்ஜின் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
- அடுப்பில் இரும்பு கடாய் வைத்து, கலவையில் குமிழி வரும் வரை, மிதமான தீயில் சூடாக்கவும்.
- வாணலியிலேயே ஆறவிடவும்.
- இந்த கலவையை ஒரு பாட்டிலில் ஊற்றவும்.
- சூரிய ஒளி படாதவாறு குளிர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
இந்த ஹேர் ஆயில், முடி வளர்ச்சியைத் தூண்டவும், உச்சந்தலையை குளிர்விக்கவும், உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும், கருமையாகவும் மாற்ற உதவுகிறது.